கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு காரணிகளால் 418 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின்  8 ஆம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் 127 பேர் காட்டுயானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரழந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.