உள்ளூராட்சி தேர்தலை பிற்போடக் கூடாது என்பவர்கள் மாகாண சபை தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை - சாணக்கியன்

Published By: Digital Desk 5

08 Nov, 2022 | 05:33 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்..வசீம்)

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் சார் உரிமை  பிரச்சனைகளுக்கு தீர்வு  வழங்காது  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட கூடாது என குரல் எழுப்புபவர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.

ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு.சிங்கள மக்களிடம் இனியாவது உண்மையை கூறுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் தற்போதைய  பொருளாதார நெருக்கடி நிலைக்கு சுதந்திரக்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரச தலைவர்கள்,அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்  மனோ கணேசன்  இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் நாட்டுக்கு ஆற்றிய பணிகள் தொடர்பில் பேசியிருந்தார். எனினும் 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த பின்னர் டி.எஸ்.சேனாநாயக்க இந்திய வம்சாவளி மக்களின் பிராஜாவுரிமையை பறித்தார்.இதுவும் பொருளாதாரப் பின்னடைவுக்கு காரணம்.

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு காணிகளை வழங்காது வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்களை அழைத்து வந்து காணிகளை வழங்கினார்கள். மாத்தறை மாவட்டத்தில் அதிகளவானோர் காணிகள் இல்லாதிருக்க மட்டக்களப்பில் உள்ளவர்களுக்கு அங்கு காணிகளை வழங்குவதை மாத்தறை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? இப்போதாவது சிங்கள மக்களுக்கு உண்மைகளை கூறுங்கள். அரசியல்வாதிகளே நாட்டை நாசம் செய்தார்கள்.

 1948ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக தீர்வு வழங்கப்படவில்லை. நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காது நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.தனிச் சிங்கள சட்டம் கொண்டு வந்ததன் பின்னர் நாட்டில் இருந்த ஐரோப்பியர்கள் இலங்கையை கைவிட்டுச் சென்றனர். 

யாழ்ப்பாணத்தில் 95 புள்ளிகளை எடுக்கு மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாது. ஆனால் அதே பரீட்சை வினாத்தாள் எழுதிய மொனராகலை மாவட்ட பிள்ளைகள் வெறும் 50 புள்ளிகளைப் பெற்றால் கூட பல்கலைக்கழகத்துக்கு செல்ல கூடிய நிலை காணப்பட்டது.

வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற தவறுகளே 30 வருடகால யுத்தத்தை தோற்றுவித்தது.. இந்த உண்மைகளை சிங்கள மக்களிடத்தில் சொல்லுங்கள். நீண்ட காலமாக இருக்கும் தமிழ் மக்களின் உரிமைசார் பிரச்சனைகளுக்கு தீர்வு  வழங்காது நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது.

யுத்தத்தை நிறைவு செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவோம் என சர்வதேசத்துக்கு இலங்கை வாக்குறுதி வழங்கியிருந்தது. இதனை 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிறைவேற்றவில்லை என்பதாலேயே இலங்கை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 பல ஆண்டு காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள், காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியைப் பெற்றுக் கொடுங்கள் என எந்தவொரு சிங்கள அரசியல்வாதிகள் சரி கூறுவார்களா? உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலந்தாழ்த்த வேண்டாமென கூறும் எவரும் மாகாணசபைத் தேர்தல் நடைபெறாதிருப்பது தொடர்பில் பேசுவதில்லை.ஏன் நாட்டில் இதுபோன்ற இரட்டை நிலைப்பாடு  இரட்டை சட்டம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08