1,630,000 க்கும் அதிகமான பக்க பார்வையாளர்கள் மற்றும் 625,000 க்கும் அதிகமான பிரத்தியேக பாவனையாளர்களை மாதமொன்றில் கொண்டுள்ள Aniwa.lk, சிங்கள உள்ளடக்கங்களையும் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது.
2016 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் ஒன்லைன் கட்டமைப்பில் உறுதியான தடத்தை Aniwa.lk பதிவு செய்துள்ளது. பொதுவான சிங்கள gossip இணையத்தளங்களிலிருந்து மாறுபட்டதாக Aniwa.lk அமைந்துள்ளதுடன், பிரபலங்கள் பற்றிய செய்திகள் மற்றும் அரசியல் அந்தரங்கங்கள் ஆகியவற்றை அம்பலப்படுத்துவதுடன் வாழ்க்கைப்பாணி, நவநாகரீகம், கலை மற்றும் கலாசாரம், சுகாதாரம், பிரயாணம், உணவு மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்த பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வடிவமைக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 10 பொருளடக்க வல்லுநர்களால் உள்ளடக்கம் வடிவமைக்கப்படும் இந்த Aniwa.lk இணையத்தளம் பெருமளவானோரின் பார்வையை பெற்ற சிங்கள வாழ்க்கை முறையை குறிக்கும் விடயங்களை கொண்ட இணையத்தளமாகும்.
Aniwa.lk இனால் முன்னெடுக்கப்படும் சந்தைப்படுத்தல் பிரச்சார செயற்பாடுகளில் ரெக்சோனா மற்றும் அஸ்ட்ரா போன்ற வர்த்தக நாமங்களின் பிரச்சார செயற்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஏளைவய Vista Rooms போன்ற சர்வதேச வாடிக்கையாளர்களின் செயற்பாடுகளுக்கும் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளன. இந்த செயற்திட்டங்களினூடாக Aniwa.lk, பொருளடக்க புத்தாக்கம் என்பதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் வர்த்தக நாமங்களுக்கு தமது விடயங்களை தொடர்பாடலை ஏற்படுத்தும் செயன்முறையை இலக்கு வைக்கப்பட்ட சந்தையை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுத்து வருகிறது.
சிங்கள மொழியில் காணப்படும் இணைய தளத்தில் Aniwa.lk இன் தாக்கம் விரிவுபடுத்தப்படும் நிலையில், சந்தைப்படுத்துநர்கள் அதிகளவு வரவேற்பை காண்பித்துள்ளனர். இவற்றை கவனத்தில் கொண்ட லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க் இந்த நிறுவனத்தில் தனது முதலீடுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. இலங்கையின் ஆரம்ப நிலை நிறுவனங்களை இனங்கண்டு அவற்றுக்கு முதலீடுகளை பெற்றுக்கொடுத்து, பெருமளவு வளர்ச்சி மற்றும் இலாபத்தை ஈட்டிக்கொள்ளக்கூடிய வசதியை லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க் மேற்கொண்டு வருகிறது. Aniwa.lk இதற்கு பொருத்தமானதாக அமைந்துள்ளது.
Aniwa.lk இன் இணை ஸ்தாபகர் அனிஷ யசரட்ன கருத்துத்தெரிவிக்கையில்,
“நாம் எமது செயற்பாடுகளை ஆரம்பித்து 10 மாதங்களின் பின்னர், இலங்கையில் Alexa.com இணையத்தளத்தின் தரப்படுத்தலில் 85 ஆவது இடத்தை பெற்றுள்ளது. அத்துடன் உள்நாட்டிலிருந்து செயற்படுத்தப்படும் உள்ளடக்க இணையத்தளங்களில் முதல் 30 இடங்களில் அமைந்துள்ளது. Aniwa.lk இனால் தற்போது 140 ஆக்கங்கள் மற்றும் வீடியோக்கள் மாதமொன்றில் வெளியிடப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து மாதமொன்றுக்கு சுமார் 8,000,000 க்கும் அதிகமான பக்க பார்வையாளர்களையும், 625,000 பாவனையாளர்களையும் ஈர்த்த வண்ணமுள்ளது.
இந்த இணையத்தளத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தும் பாவனையாளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்துகின்றனர். மேலும் Aniwa.lk பக்கத்தின் 84 வீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் 18 – 44 வயதுக்குட்பட்டவர்களாக அமைந்துள்ளனர். சுமார் 40 சதவீதமானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Aniwa.lk இன் Facebook பக்கமும் பெருமளவு வரவேற்பைப்பெற்றுள்ளது.
130,000க்கும் அதிகமான பக்க like களை பெற்றுள்ளது. வாராந்தம் Facebook ஊடாக 3.8 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைகிறது. Likes, Comments, Shares, மற்றும் Clicks ஆகியன அடங்கலாக வாரமொன்றில் 450,000க்கும் அதிகமான பார்வையிடல்கள் காணப்படுகின்றன. ஐ பொறுத்தமட்டில் Aniwa.lk வீடியோ பெருமளவு வரவேற்பை பெற்றுள்ளது. மாதமொன்றில் 1,000,000க்கும் அதிகமான வீடியோ பார்வையிடல்களை பெற்றுக்கொள்வது என்பது இலக்காக அமைந்துள்ளது.
அனிஷ யசரட்ன, நந்த அபேசேகர மற்றும் கிஹான் டயஸ் ஆகியோர் இணைந்து ஸ்தாபித்திருந்த Aniwa.lk தளம் லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க் வழங்கும் முதலீடுகள் மற்றும் தொடர்புகளினூடான ஆலோசனைகள் போன்றவற்றினால் பெருமளவு அனுகூலங்களை பெற்றுக்கொள்ளவுள்ளது. லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க்கில் அதிகளவு மதிப்பைப்பெற்ற தனிநபர்கள் காணப்படுவதுடன் இவர்கள் உள்நாட்டில் தொழில்முயற்சியாண்மையை ஊக்குவிக்கும் செய்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையின் முதலாவது லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க்கின் நோக்கம் இலங்கையின் உள்நாட்டு முதலீட்டாளர் மற்றும் ஆலோசனையாளர் சமூகத்தை ஒன்றிணைத்து ஆரம்ப நிலையில் காணப்படும் நிறுவனங்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM