உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலை பிற்போடும் நோக்கில் எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது - அநுரகுமார 

Published By: Digital Desk 5

08 Nov, 2022 | 03:04 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது. உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலை பிற்போடும் நோக்கில் எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. 

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா அரசாங்கத்தின் சதிக்கு சிக்குப்படாமல், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவார் என எதிர்பார்க்கிறோம். 

உள்ளளூராட்சி மன்ற தேர்தல் பாராளுமன்றத்தின் தன்மையை உறுதிப்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் ஏற்கெனவே ஒரு வருட காலம் பிற்போடப்பட்டுள்ளது. ஆகவே 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்தும் அனைத்து அதிகாரமும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது, ஆகவே தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட வேண்டும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா ஒவ்வொரு சதிகளுக்கு சிக்குப்படாமல்,அரசாங்கத்தின் பங்குதாரராகமல் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்துவார் என நம்பிக்கை கொண்டுள்ளோம்.

எல்லை நிர்ணயம் அறிக்கையை அடிப்படையாக கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது,134 பாரர்ளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதியாக ஜனாதிபதி பதவி வகிக்கிறார்.தற்போதைய பாரளுமன்றத்திற்கும் மக்களாணை கிடையாது.

பொதுஜன பெரமுனவின் அரசாங்கததின் பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்,நிதியமைச்சராக பதவி வகித்த பஷில் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார்.இவ்வாறான நிலையில் அரசாங்கத்திற்கு மக்களாணை முழுமையாக கிடையாது.

மக்களாணையுடன் அரசாங்கம் என்பதொன்று இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக பொருத்தப்பட்ட தரப்பினரை உள்ளடக்கிய அரசாங்கம் தற்போது உள்ளது.

மக்களாணைக்கு முரனாக ஆட்சியை முன்னெடுக்க முடியாது ஆகவே 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட இந்த அரசாங்கம் தகுந்த பாடம் கற்றுக்கொள்ளும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்றதை தொடர்ந்து பாராளுமன்றத்தின் தன்மை உறுதிப்படுத்தப்படும்,ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19