முன்னாள் அம்பாறை மேயர் இன்டிக நலின் ஜெயவிக்ரமவுக்கு பிடியாணை பிறப்பித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று (28)  பிறப்பித்துள்ளார்.

இந்திக நலின் ஜெயவிக்ரம வழக்கொன்று தொடர்பில் நீதிமன்றத்துக்கு ஆஜராகாத காரணத்தினாலேயே குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.