மன்னாரில் இடம்பெற்ற கௌரவமான அரசியல் தீர்வு கோரிய 100 ஆவது நாள் செயல் முனைவு போராட்டம்

By Digital Desk 5

08 Nov, 2022 | 02:07 PM
image

வடக்கு - கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு  கோரிய 100 ஆவது நாள் செயல் முனைவின் மக்கள் குரல் பிரகடனத்தின் 100 ஆம் நாள் பிரகடன ஒன்று கூடலானது இன்று செவ்வாய்க்கிழமை (08)  காலை 11 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் கடந்த 99 நாட்கள் சுழற்சி முறையில் மக்கள் போராட்டங்கள் இடம் பெற்று வந்தது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' , நாங்கள் நாட்டை துண்டாட வோ தனியரசு கேட்கவில்லை.இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் '

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு    ஜனநாயக உரிமையாகும் 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கதுக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.

பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை இல்லாதொழிப்போம்' எங்கள் நிலம் எமக்கு வேண்டும்,நடமாடுவது எங்கள் உரிமை,பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை,ஒன்று கூடுவது எங்கள் உரிமை,மத வழிபாடு  எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை  கொச்சைப்படுத்தாதே,இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு அபகரிக்காதே என பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

குறித்த நூறு நாள் மக்கள் செயவ்முனைவின் இறுதி நாள் மக்கள் பிரகடனம் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில்  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வடமாகாண இணைப்பாளரும் மன்னார் மாவட்ட மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜே.யாட்சன் பிகிராடோ தலைமையில்   இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மத தலைவர்கள்,மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்கள்,மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணைய பிரதிநிதிகள்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

 இதன்  போது 'புரையோடிக் கிடக்கும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான சமஷ்டி அரசியல் தீர்வு ' வேண்டிய மக்கள் பிரகடனம் இடம் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01
news-image

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில்...

2023-02-05 12:55:22
news-image

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் மகன் தொடர்பு...

2023-02-05 17:40:33