(நெவில் அன்தனி)
இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட டயலொக் கனிஷ்ட தேசிய வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை பாடசாலைகள் சங்கத்தைப் பிரதிநித்துவப்படுத்திய பாடசாலை அணிகள் ஆதிக்கம் செலுத்தி சம்பியன் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றன.
பாடசாலைகள் வலைபந்தாட்டத்தில் ஒரு தசாபத்தத்திற்கு மேல் ஆதிக்கம் செலுத்திவரும் குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் கல்லூரி சம்பியனானது. இரண்டாம் இடத்தை கொழும்பு மியூசியஸ் கல்லூரி பெற்றது.
இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 27 வலைபந்தாட்ட சங்கங்களைச் சேர்ந்த 38 அணிகள், 8 குழுக்களில் பங்குபற்றிய டயலொக் கனிஷ்ட தேசிய வலைபந்தாட்ட சுற்றுப் போட்டி பொலன்னறுவை கல்லேல்ல பொது விளையாட்டரங்கில் கடந்த வார இறுதியில் இரண்டு தினங்கள் நடத்தப்பட்டது.
இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்ற யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்ட அணிகள் கால் இறுதிக்கு முன்னேறவில்லை.
இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் கல்லூரியும் கொழும்பு மியூஸியஸ் கல்லூரியும் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றன.
ஆரம்பம் முதல் மூன்றாம் கால் மணி நேர ஆட்டம் வரை இரண்டு அணிகளும் விறுவிறுப்பைத் தொற்றுவிக்கும் வகையில் கடுமையாக போட்டியிட்டன.
முதலாவது கால்மணி நேர ஆட்டத்தில் திருக்குடும்ப அணி 11- 9 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் இரண்டாவது கால்மணி நேர ஆட்டத்தில் இரண்டு அணிகளும் தலா 11 கோல்களைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு அமைய இடைவேளையின்போது திருக்குடும்ப அணி 22 - 20 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் மூன்றாவது கால்மணி நேர ஆட்டத்தை மீண்டும் 11 - 9 என்ற கோல்கள் கணக்கில் திருக்குடும்ப அணி தனதாக்கி 33 - 29 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
கடைசி கால்மணி நேர ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய திருக்குடும்ப அணி அப்பகுதியை 12 - 6 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கி ஒட்டுமொத்மாக 45 - 37 என்ற கோல்கள் கணக்கில் மியூசியஸ் அணியை வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
இந்த சுற்றுப் போட்டியில் திருக்குடும்ப அணி வீராங்கனை ஹிருணி ஹேஷானி வலைபந்தாட்ட இராணியாக முடிசூட்டபட்டார்.
சிறந்த மத்திய கள வீராங்கனையாக மியூசியஸ் கல்லூரி வீராங்கனை நெத்மி விஜேநாயக்கவும் அதிசிறந்த கோல்போடும் வீராங்கனையாக திருக்குடும்ப அணி வீராங்கனை பாஷி உடகெதரவும் தெரிவாகினர்.
பரிசளிப்பு வைபவத்தின்போது டயலொக் ஆசிஆட்டா சந்தைப்படுத்தல் பொதுமுகாமையாளர் அஷானி சேனாரட்ன, இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத் தலைவி விக்டோரியா லக்ஷ்மி ஆகியோர் டயலொக் வெற்றிக்கிண்ணத்தை குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் அணித் தலைவி தானியா குமாரி குணசேகரவிடம் கையளித்தனர்.
இந்த வைபவத்தில் அரலகன்வில பொலிஸ் கல்லூரியின் பிரதி பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் கே. டி. சந்த்ரபால, டயலொக் ஆசிஆட்டா குழுமத்தின் பொலன்னறுவை பிராந்திய செயற்பாட்டு நடிவடிக்கை மாவட்ட முகாமையாளர் லஹிரு ப்ரமோத் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM