ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

Published By: Digital Desk 5

08 Nov, 2022 | 02:03 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தங்கல்ல மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குடாவெல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 

544 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்டவர் 43 வயதுடைய ஒருவர் எனவும் அவர் நாகுலுகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தங்கல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அவர் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது பேருவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அபெப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றினை பரிசோதனைக்கு உட்படுத்திய போது 7 ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அங்கிருந்து 8 கிலோ 304 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடைய ஒருவர் எனவும் அவர் பெருவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவர்.

சந்தேகநபர் களுத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாத்தறை உப பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58