முச்சக்கரவண்டி விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு : 6 பேர் காயம்

By Digital Desk 5

08 Nov, 2022 | 02:00 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

அனுராதபுரம் கல்கமுவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதியதில்  4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவம் திங்கட்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கமுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குருநாகல்- அநுராதபுரம் பிரதான வீதியில் பாதெனிய விலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டி சாரதி அதில் பயணித்த பெண்கள் இருவர் இரண்டு சிறுமிகள் மற்றும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்த நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இருப்பினும் இதன் போது பலத்த காயமடைந்த சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 4 வயதுடைய பாலுகந்த, கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவனாவான்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இதன்போது காயமடைந்தவர் அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுதுள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் காலம் தாழ்த்தப்படுமாயின் சர்வதேசத்தை நாடுவோம்...

2023-02-06 16:21:47
news-image

பண்டாரநாயக்கவைப் போன்று என்னையும் கொல்லாமல் கொல்கின்றனர்...

2023-02-06 14:52:24
news-image

உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்படும் - வாசுதேவ...

2023-02-06 14:51:06
news-image

தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம்...

2023-02-06 16:56:38
news-image

மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச நிர்வாகம்...

2023-02-06 14:59:52
news-image

அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு...

2023-02-06 16:13:59
news-image

யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு...

2023-02-06 16:59:35
news-image

பான் கீ மூன் - ஜனாதிபதி...

2023-02-06 16:58:59
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட...

2023-02-06 16:53:21
news-image

கும்புக பிரதேச விபத்தில் சிக்கி உயிரிழந்த...

2023-02-06 16:36:31
news-image

எசல பெரஹர காலத்தில் பொருளாதார நிவாரணத்தைப்...

2023-02-06 16:11:49
news-image

கிழக்கு மாகாண எல்லைக்குள் நுழைந்து பேரணி

2023-02-06 15:40:56