(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தொடர்பான முழுமையான விடயங்களை சபைக்கு சமர்பிப்பதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபாநாயகரிடம் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்ற கூட்டத்தொடர் கூடிய போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எரிபொருள் கொள்வனவு மற்றும் இறக்குமதி தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடந்த காலங்களில் பல்வேறு விடயங்களை முன்வைத்துள்ளார்கள்.எரிபொருள் இறக்குமதி தொடர்பிலான தகவல்களை வெளிப்படை தன்மையுடன் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தினார்கள்.
இதற்கமைய 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தொடர்பான சகல விடயங்களையும் சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
குடந் கடந்த 10 மாத காலமாக இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கான விலை மனுக்கோரல்,விலை மனுக்கோரலின் கட்டணம் மற்றும் விலை மனுக்கோரலுக்கு அப்பாற்பட்ட நிலையில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் தொடர்பான விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் இறக்குமதி தொடர்பான முழுமையான தகவல்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனூடாக பெற்றுக்கொள்ளலாம.அத்துடன் பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சபையின் நடவடிக்கைக்கும் இந்த தகவல்கள் சாதகமாக அமையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM