கெரட் ஊறுகாய்

Published By: Devika

08 Nov, 2022 | 10:54 AM
image

தேவையான பொருட்கள்: 

கெரட் - 250 கிராம் 

எலுமிச்சை பழம் - 5

பச்சை மிளகாய் - 10

பெருங்காயம் - ½ டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 

கடுகு - 1 தேக்கரண்டி 

உப்பு - தேவைக்கேற்ப 

எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

கெரட்டை தோல் சீவி நீளமான துண்டு­களாக வெட்டிக் கொள்ளவும். ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

ஒரு கிண்ணத்தில் கெரட் துண்டுகள், பச்சை மிளகாய், எலுமிச்சை பழச்சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும். 

சூப்பரான கெரட் ஊறுகாய் ரெடி.

குறிப்பு:

தாளிப்பதற்கு நல்லெண்ணெய் பயன்­படுத்து­வது நன்று.

ஊறுகாயை மூடியுள்ள ஒரு சாடியில் அடைத்து வைத்தால் ஒரு வாரம் வரை கெடா­மல் பயன்படுத்தலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்