தூங்குவதற்கு முன் கைப்பேசி வேண்டாம் !

Published By: Devika

08 Nov, 2022 | 10:47 AM
image

டலையும், மன­தை­யும் ஆரோக்­கியமாக வைத்திருக்க சரியான நேரத்­தில் தூங்கு­வது முக்கியமானது. தூங்கச் செல்வதற்கு முன்பு கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்துதல் நேரத்தை வீணாக்குவதோடு கண் எரிச்சல், தலைவலி, தூக்கமின்மை, பசியின்மை போன்ற உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்­படுத்­தும். 

கைப்பேசியை பலரும், தூங்கப் போகும் நேரத்தில் தான் அதிகம் பயன்படுத்து­கின்­றனர். இதைத் தவிர்க்க சில வழி­முறை­களை பின்பற்றலாம். 

தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே கைப்பேசியை பயன்­படுத்­துவதை தவிர்க்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானமே இதை நடை­முறை­படுத்துவதற்கான சிறந்த வழி. 

நீங்கள் எவ்வளவு நேரம் கைப்பேசியை பயன்­படுத்துகிறீர்கள் என்பதை கண்­காணிக்க வேண்டும்.

இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கைப்பேசி பயன்பாட்டைத் தவிர்க்க கடிகாரத்தில் அலாரம் செட் செய்யலாம். கடிகார அலாரம் அடித்த பின்பு கைப்பேசி பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். 

மேலும் உங்கள் கைப்பேசியில் செட்­டிங்ஸ்-சில் ‘நைட் மோட’ என்ற அம்சத்தை ‘க்ளிக்’ செய்து தூங்கப் போகும் நேரத்தை செட் செய்துவிட்டால், நீங்கள் தூங்க வேண்­டிய நேரத்தில் கைப்பேசி பயன்­படுத்­திக் கொண்டிருந்­தால், கைப்பேசி திரையின் வண்ணம் மாறி, ‘இது தூங்க வேண்டிய நேரம்’ என்பதை நினை­வூட்டும். 

நீங்கள் தூங்க சென்று­விட்டாலும், கைப்பேசியில் அவ்வப்போது வரும் நோட்டி­பிகேஷன்கள் உங்களை மீண்­டும் கைப்­பேசியை பயன்படுத்த தூண்டலாம். இதைத் தவிர்க்க டிஜிட்டல் வெல்பீயிங்கிலுள்ள ‘பெட் டைம் மோட்’ என்ற அம்­சம் பயன்படும். 

கைப்பேசியிலிருந்து வெளி­யாகும் நீல ஒளி அலைகள், இரவு நேரங்களில் கண் பார்­வை­யையும் தூக்கத்தையும் அதிகம் பாதிக்­கும்.

இத­னைத் தவிர்க்க பயன்படுத்­தும் கைப்­பேசியை படுக்கும் இடத்தில் இருந்து கைகளுக்கு எட்டாத தூரத்தில் வையுங்கள். அல்லது படுக்கை அறைக்கு வெளியே வையுங்­கள். இதன்மூலம் தூங்கும் போது கைப்பேசியை பயன்­படுத்தும் ஆர்வத்தைக் குறைக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பொண்டிலோலிஸ்டெஸிஸ் எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-02-12 17:05:03
news-image

14,0000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களுக்கு...

2025-02-12 14:15:17
news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31