(ம .குமணன்)

தமிழ் மக்களின் விடுதலைக்காய்  உயிர்நீத்த மாவீரர்களின் நினைவாக முல்லைத்தீவு நந்திக்கடலில் சுடரேற்றி உறவுகளால் அஞ்சலி செலுத்தப்ட்டது.

முல்லை  மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பீற்றர் இளஞ்செழியன்   தலைமையில் நேற்றிரவு முல்லைத்தீவு நந்திக் கடற்கரையில்  மாவீரர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற வைத்திய கலாநிதி  சிவமோகன் மாவீரர்களுக்கான பிரதான சுடரினை ஏற்றிவைத்து அகவணக்கம் செலுத்தினார்.

இதன்போது கடலில் காவியமான  மாவீரர்களுக்கு கடலிலும் சுடர் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில்  பெருமளவிலான மக்கள் உணர்வெளிச்சியுடன் கலந்து கொண்டனர்.