புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு வருடத்துக்கு முன்னர் ரோம் நகரில் பாப்பரசரின் ஆசிபெற்ற 12 வயது சிறுமியொருவர் நோயிலிருந்து முழுமை யாக விடுதலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நியூ ஜெர்ஸி மாநிலத்தைச் சேர்ந்த கிரேஸ் என்ற சிறுமியே இவ்வாறு அதிசயிக்கத்தக்க வகையில் புற்றுநோயி ருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.

கிரேஸுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச் சையும் அவரது அளவுகடந்த நம்பிக்கையுமே அவருக்கு புற்றுநோயிலிருந்து விடுதலை பெற உதவியதாக தெரிவிக்கப்படு கிறது.