(இராஜதுரை ஹஷான்)
கடன் மறுசீரமைப்பிற்காக பிரதான நிலை கடன் வழங்குநர்கள் எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.கடன் வழங்குநர்களுடன் இரண்டாவது சுற்றாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை கடன் மறுசீரமைப்பிற்கு சாதகமான தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பிரதான நிலை கடன் வழங்குநர்களுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கடன் மறுசீரமைப்பு தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எதிர்வரும் மாதம் எட்டுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட போதும் தவிர்க்க முடியாத காரணிகளினால் அது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தாமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பிற்கான சீனா,இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பிரதான நிலை கடன் வழங்குநர்களுடன் முன்னெடுக்கப்பட்ட முதலாவது கட்ட பேச்சுவார்த்தை சாதகமாக காணப்பட்டது,கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது சட்டம் மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இலங்கையின் சகல கடன் வழங்குநர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும்,அத்துடன் கடன் மறுசீரமைப்பு வெளிப்படை தன்மையுடன் காணப்பட வேண்டும் என பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது.கடன் மறுசீரமைப்பிற்காக பிரதான நிலை கடன் வழங்குநர்கள் உட்பட ஏனைய நாடுகள் நிபந்தனை விதிக்கவில்லை.பொருளாதார மீட்சிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்கள்.
எதிர்வரும் 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டம் அரச வருவாய் அதிகரிப்பிற்கு முன்னுரிமை வழங்கியதாக காணப்படும். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண்பதற்கு ஒருசில கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக காணப்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM