இரைச்­ச­லினால் சுற்­றாடல் மாச­டை­வ­தற்கு எதி­ராக தொடுக்­கப்­பட்ட வழக்­கொன்றின் விசா­ர­ணையில் ஆஜ­ரா­கு­மாறு இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள பௌத்த விகா­ரையின் குரு­வுக்கு உயர் நீதி­மன்றம் அழைப்­பாணை பிறப்­பித்­தி­ருந்­தது. அவர் மன்றில் ஆஜ­ராகத் தவ­றி­ய­தனால் அவ­ருக்கு எதி­ராக பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டது. பிர­தம நீதி­ய­ரசர் தலை­மை­யி­லான உயர்­நீ­தி­மன்ற அமர்­வினால் பிறப்­பிக்­கப்­பட்ட அந்த உத்­த­ர­வை­ய­டுத்து தேரரைக் கைது செய்த இரா­ஜ­கி­ரிய பொலிஸார் விளக்­க­ம­றி­யலில் வைத்­தனர். அவரைப் பிணையில் விடு­விக்­கு­மாறு கோரி பிறகு மனு­வொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டது. அந்த  பிணை­ம­னுவை பரி­சீ­ல­னைக்கு எடுப்­ப­தற்­காக உயர்­நீ­தி­மன்­றத்­திற்குள் பிர­தம நீதி­ய­ர­சரும் வேறு இரு நீதி­ய­ர­சர்­களும் பிர­வே­சித்­த­போது இரா­ஜ­கி­ரிய தேர­ருக்கு தங்கள் ஒரு­மைப்­பாட்டை வெளிக்­காட்­டு­வ­தற்கு வந்­தி­ருந்த பெரும் எண்­ணிக்­கை­யான பிக்­குமார் இருக்­கை­களை விட்டு எழுந்து நீதித்­து­றைக்­கு­ரிய பாரம்­ப­ரிய மரி­யா­தையைச்  செலுத்த மறுத்­து­விட்­டனர்.

அதை அவ­தா­னித்த பிர­தம நீதி­ய­ரசர் தேரரின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணி­யிடம் நீதி­மன்றச் சம்­பி­ர­தாய நடை­மு­றை­களை சக­லரும் மதித்துப் பேண வேண்டும் என்று அறி­வு­றுத்­தினார். தேரரை மீண்டும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதி­ய­ர­சர்கள் உத்­த­ர­விட்­ட­தை­ய­டுத்து நீதி­மன்ற கட்­டிடத் தொகு­திக்கு வெளியே வந்த பிக்­குமார் அந்த உத்­த­ரவை கடு­மை­யாகக் கண்­டனம் செய்­தனர்.

இச்­சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து பௌத்த மத­கு­ரு­மாரை அவ­ம­திக்கும் வகையில் அர­சாங்கம் செயற்­ப­டு­கி­றது என்ற குற்­றச்­சாட்டு மகா­சங்­கத்­தி­னரில் ஒரு பிரி­வி­ன­ராலும் ஜாதிக ஹெல உறு­மய போன்ற சில அர­சியல் கட்­சி­க­ளி­னாலும் முன்­வைக்­கப்­பட்­டது. நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வை­ய­டுத்தே தேரர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டதால் நீதித்­து­றையின் தீர்­மா­னங்­களில் தன்னால் தலை­யிட முடி­யாது என்றும்  நிறை­வேற்று அதி­கார பீடத்­துக்கும் நீதித்­து­றைக்கும் இடையே முரண்­பாடு ஏற்­ப­டக்­கூ­டி­ய­தாக செயற்­ப­டு­வ­தென்­பது ஜன­நா­ய­கத்தை ஆபத்­துக்­குள்­ளாக்கி விடும் என்றும் ஜனா­தி­பதி விளக்­க­ம­ளிக்க வேண்­டி­யி­ருந்­தது. சட்­டத்­தையும் நீதி­மன்­றங்­க­ளையும் சகல பிர­ஜை­களும் மதித்து நடக்க வேண்டும் என்றும் பௌத்த பிக்­கு­மாரும் நீதித்­து­றைக்கு மதிப்­ப­ளிக்க கட­மைப்­பட்­ட­வர்கள் என்றும் மல்­வத்தை பீடா­தி­ப­தியும் அஸ்­கி­ரிய பீடா­தி­ப­தியும் அறி­வுரை கூற வேண்­டி­யி­ருந்­தது. 

உயர் நீதி­மன்­றத்­துக்குள் நீதி­ய­ர­சர்கள் பிர­வே­சித்­த­போது எழுந்து நின்று மரி­யாதை செலுத்தி நீதி­மன்றப் பாரம்­ப­ரி­யத்தை மதிக்கத் தவ­றிய பிக்­கு­மாரின் செயல் பரந்­த­ளவில் கன்­ட­னத்­துக்­குள்­ளா­கி­யி­ருந்த போதிலும்இ அந்தப் பிக்­கு­மாரை நியா­யப்­ப­டுத்தி பல்­வேறு பௌத்த அமைப்­புக்கள் கருத்­துக்­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருந்­தன.

இரா­ஜ­கி­ரிய விகா­ரையின் தேரர்  நீதி­மன்­றத்தில் ஆஜ­ராக வேண்­டிய திக­தியை அறிந்­தி­ருக்­க­வில்லை என்று கூறி அவரின் சார்பில் தாக்கல் செய்­யப்­பட்ட பிணை மனு­வை­ய­டுத்து உயர்­நீ­தி­மன்றம் பிறி­தொரு தினத்தில் அவரை விடு­தலை செய்­தது. உயர் நீதி­மன்­றத்தின் அந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்ட சில மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் கொழும்பில் செய்­தி­யாளர் மாநாட்டைக் கூட்­டிய  மத­மாற்­றங்­களைக் கண்­கா­ணிப்­ப­தற்­கான தேசிய நிலை­யத்தின் பணிப்­பா­ள­ராக அன்று இருந்த கல­கொட அத்தே ஞான­சார தேரர் மகா சங்­கத்­தி­னரை அவ­ம­தித்­த­தாக பிர­தம நீதி­ய­ரசை கண்­டனம் செய்­த­துடன் அவரால் ஏற்­க­னவே வழங்­கப்­பட்ட நூற்­றுக்கும் அதி­க­மான தீர்ப்­புகள் சட்ட விரோ­த­மா­னவை என்றும் கூடக் கூறி­யி­ருந்தார். 

பிர­தம நீதி­ய­ர­சரின் செயற்­பா­டுகள் குறித்து விசா­ரணை செய்­வ­தற்கு பாரா­ளு­மன்றத் தெரிவுக்  குழு­வொன்றை நிய­மிக்க வேண்டும் என்றும் ஞான­சார தேரர் கோரிக்கை விடுத்தார். நீதி­மன்றச் சம்­பி­ர­தா­யங்­களை மதிக்கத் தவ­றிய பிக்­கு­மாரின் நடத்­தைகள் குறித்து சர்ச்­சைகள் கிளம்­பிய அந்த நேரத்தில் உயர் நீதி­மன்­றத்தை மேலும் அவ­ம­திக்கும் வகை­யிலும் பிர­தம நீதி­ய­ர­ச­ரினால் வழங்­கப்­பட்ட தீர்ப்­புக்­களை சட்ட  விரோ­த­மா­னவை என்றும் வர்­ணித்து இன்­னொரு பிக்கு பேசு­வ­தற்கு கிஞ்­சித்தும் தயங்­காமல் துணிச்­சலை வர­வ­ழைத்துக் கொண்ட நிலை­மையைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

இது நடந்­தது இன்று நேற்­றல்ல,  8 வரு­டங்­க­ளுக்கு முன்பு. தற்­போது சில பௌத்த பிக்­குமார் நாட்டின் சட்­டங்­களில் இருந்து விடு­பாட்டு உரிமை பெற்­ற­வர்­க­ளாகத் தங்­களை நினைத்துக் கொண்டு அடா­வ­டித்­த­னங்­களில் ஈடு­ப­டு­வ­துடன் இனங்­க­ளுக்­கி­டை­யிலும் மதங்­க­ளுக்­கி­டை­யிலும் மோதல்­களைத் தூண்­டி­வி­டக்­கூ­டி­ய­தாக வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்­களை நிகழ்த்திக் கொண்­டி­ருப்­பது குறித்து கிளப்­பப்­பட்­டி­ருக்கும் சர்ச்­சை­க­ளை­ய­டுத்து அந்த 8 வரு­டங்­க­ளுக்கு முன்­ன­ரான  சம்­ப­வமே உட­ன­டி­யாக நினை­வுக்கு வந்­தது. இடைப்­பட்ட காலத்தில் பிக்­குமார் தங்­க­ளது துற­வற அந்­தஸ்த்­துக்கு எது­வி­தத்­திலும் பொருத்­த­மில்­லாத வகையில், நாக­ரி­க­மற்ற முறையில் வன்­மு­றை­யாக நடந்­து­கொண்ட சம்­ப­வங்கள் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் இடம்­பெற்­றி­ருந்த போதிலும், சட்­டத்தின் ஆட்­சி­யையே அவர்கள் மதிக்­காமல் நடந்து கொள்­கின்ற போக்கு அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்து வரு­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. நீதி­மன்­றங்­களின் முன்­பாக அடா­வ­டித்­த­ன­மாக அவர்கள் நடந்­து­கொண்ட சில சம்­ப­வங்கள் மிக அண்மைக் காலத்தில் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்ற போதிலும், நாட்டின் நீதித்­து­றையின் உச்ச நிறு­வ­ன­மான உயர்­நீ­தி­மன்­றத்தில் அதுவும் பிர­தம நீதி­ய­ர­ச­ரையே அவ­ம­திக்கும் வகை­யி­லான அவர்­களின் அந்த நடத்தை சட்­டத்தை விடவும் தாங்கள் மேலா­ன­வர்கள் என்ற ஒரு­வித மம­தையை அவர்கள் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை அம்­ப­லப்­ப­டுத்தி நின்­றது. நய­நா­க­ரி­க­மற்ற செயற்­பா­டு­களைப் பொறுத்­த­வரை பிக்­கு­மாரில் சிலர் எந்­த­ளவு தூரத்­துக்கு செல்லத் தயா­ரா­கி­யி­ருக்­கி­றார்கள் என்­பதை உணர்த்­தவே அச்­சம்­ப­வத்தை இங்கு நினை­வு­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில்  மங்­க­ள­ராம விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ண­ரத்ன தேரர் நடு­வீ­தியில் வைத்து பொது­மக்­க­ளி­னதும் பொலி­ஸா­ரி­னதும் முன்­னி­லையில் தமிழ்க் கிராம சேவை­யா­ளரை இனத்­து­வே­ச­மாக  தூஷித்து அச்­சு­றுத்­தி­யதை காண்­பிக்கும் வீடியோ பதி­வுகள் சமூக ஊட­கங்­களில் பர­வி­யி­ருக்­கின்­றன. 

அவர் அந்தக் கிராம சேவை­யா­ளரை புலி என்றும் நாய் என்றும் அவ­தூறு செய்­த­துடன் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்­குகள் தாக்கல் செய்­வதை நிறுத்­தா­விட்டால் தமி­ழர்­க­ளி­னதும்  முஸ்­லிம்­க­ளி­னதும் ‘கொட்­டத்தை’ ஒடுக்கப் போவ­தா­கவும் எச்­ச­ரிக்கை செய்தார். ஒரு அர­சாங்க ஊழி­யரை கட­மையைச் செய்­ய­வி­டாமல் இடை­யூறு செய்து வன்­மு­றை­யாக நடந்­து­கொண்ட அந்தப் பிக்­கு­வுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­காமல் பொலிஸ் அதி­கா­ரிகள் அவரை சாந்­தப்­ப­டுத்தி அழைத்துச் செல்­வ­தையும் வீடி­யோவில் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. மட்­டக்­க­ளப்பில் பிக்­குவின் அடா­வ­டித்­த­னத்தைக் கண்­டித்து பிர­தேச செய­லக அலு­வ­லர்­களும் கிராம சேவை­யா­ளர்­களும்  மறியல் போராட்­டத்தை நடத்­தி­ய­துடன் சம்­பந்­தப்­பட்ட கிராம சேவை­யாளர் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாட்­டையும் செய்­தி­ருந்தார். அது­மாத்­தி­ர­மல்ல,  350 க்கும் அதி­க­மான கல்­வி­மான்கள், சமூக ஆர்­வ­லர்கள், மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள் (இவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள்) பிக்­குவின் நடத்­தைகள் குறித்து சான்­று­க­ளுடன் பொலிஸ் மாஅ­தி­ப­ருக்கு விரி­வான முறை­யீட்டு கடிதம் ஒன்­றி­னையும் அனுப்­பி­வைத்­தி­ருந்­தார்கள். (இதை எழு­திக்­கொண்­டி­ருக்கும் தரு­ணம்­வரை பொலிஸ் மா அதிபர் பிக்­கு­வுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க எந்த உத்­த­ர­வையும் பிறப்­பித்­த­தாக செய்­திகள் வர­வில்லை) ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவும் சிரேஷ்ட அமைச்­சர்­களும் இனங்­க­ளுக்­கி­டையில் பதற்ற நிலையைத் தோற்­று­விக்­கக்­கூ­டி­ய­தாக செயற்­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பொதுப்­ப­டை­யாக அறி­வு­றுத்­தல்­களை விடுத்­தி­ருக்­கி­றார்­களே தவிர, மட்­டக்­க­ளப்புச் சம்­பவம் தொடர்பில் எந்­த­வி­த­மான பிரத்­தி­யேக நட­வ­டிக்­கைக்கும் உத்­த­ர­விட்­ட­தாக இல்லை. இந்தப் பிக்கு கடந்த காலத்­திலும் அடா­வ­டித்­த­ன­மான செயற்­பா­டு­களில் இறங்­கி­யி­ருந்­த­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. அது­போகஇ சட்ட விரோ­த­மாக காணி­களில் குடி­யே­றி­ய­வர்­க­ளுக்கு எதி­ரா­கவே அந்த கிராம சேவை­யாளர் வழக்­கு­களைத் தாக்கல் செய்ய நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளைஇ கடந்த சில வரு­டங்­க­ளாக முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான இனக் குரோதப் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்ற பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான சார தேரர் ஏற்­கெ­னவே நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­த­தாக வழக்கு விசா­ர­ணை­யொன்று நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்ற போதிலும்இ எந்­த­வி­த­மான தயக்­கமும் இல்­லாமல் அவர் மீண்டும் இனங்­க­ளுக்­கி­டையில் பதற்ற நிலையைத் தோற்­று­விக்­கக்­கூ­டிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த வண்­ண­மே­யி­ருக்­கிறார். 

தான் விதித்த காலக்­கெ­டு­வுக்குள் முஸ்லிம் அமைப்­பொன்றின் முக்­கி­யஸ்­தரை பொலிஸார் கைது செய்­யா­விட்டால் கொழும்பின் ஒரு குறித்த பகு­தியில் இரத்­தக்­க­ளரி ஏற்­படும் என்றும் தங்­களைச் சார்ந்த நூறு இளை­ஞர்கள் உயிரைத் தியாகம் செய்­வ­தற்குத் தயா­ரா­யி­ருக்­கி­றார்கள் என்றும் அவர் சில தினங்­க­ளுக்கு முன்னர் பகி­ரங்­க­மாக  எச்­ச­ரிக்கை விடுத்­ததைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. 

அவர் குறிப்­பிட்ட அந்த முஸ்லிம் அமைப்பின் முக்­கி­யஸ்தர் தேரரின் 24 மணி­நேரக் காலக்­கெ­டு­வுக்கு முன்­ன­தாக கைது செய்­யப்­பட்­டதை நாடு கண்­டது. அந்தச் சர்ச்­சைக்குப் பின்­ன­ணியில் உள்ள கார­ணிகள் ஒரு­பு­ற­மி­ருக்­கட்டும்இ தலை நகரில் ஒரு குறிப்­பிட்ட சமூ­கத்­தினர் பெரு­ம­ளவில் வாழும் பகு­தியில் இரத்­தக்­க­ளரி ஏற்­ப­டு­மென்றும் பலர் சாவார்கள் என்றும் பகி­ரங்­க­மாகக் கூறு­கின்ற ஒரு மத­குரு மீது எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக அவ­ரையும் அவ­ரது இயக்­கத்தைப் போன்ற வேறு சில இயக்­கங்­களின் பிர­தி­நி­தி­க­ளையும் பாரா­ளு­மன்றக் கட்­டி­டத்­தொ­கு­திக்கு அழைத்து நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜபக் ஷ சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­வ­கை­களை ஆராய்ந்­த­தாக செய்­தி­களில் அறி­யக்­கூ­டி­ய­தாக இருந்­தது. தீவி­ர­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பேச்­சு­வார்த்­தையே உகந்த வழி என்று ராஜபக் ஷவும் அவ­ரு­ட­னான பேச்­சு­வார்த்தை திருப்­தி­யா­ன­தாக இருந்­த­தாக ஞான­சார தேரரும் கூறி­யி­ருந்­தார்கள்.

இனங்­க­ளுக்­கி­டை­யிலும் மதங்­க­ளுக்­கி­டை­யிலும் வெறுப்­பு­ணர்­வையும் சந்­தே­கத்­தையும் தூண்டி விடு­கின்ற நச்­சுத்­த­ன­மான சூழ்­நி­லையை நாட்டில் உரு­வாக்­கு­வதில் முழு மூச்­சாக ஈடு­ப­டு­கின்ற இத்­த­கைய பிக்­குமார் முன்­னி­லையில் ஏது செய்­வ­தென்று அறி­யா­த­வர்­க­ளாக பொலிஸார் நிற்­கி­றார்கள். அவர்கள் முன்னால் பொலிஸார். மிகவும் அடக்க ஒடுக்­க­மா­கவே பேசு­கி­றார்கள். அந்த பிக்­கு­மாரை இயன்ற வரையில் சாந்­தப்­ப­டுத்­து­கின்ற அணு­கு­மு­றை­க­ளையே கையா­ளக்­கூ­டிய கையறு நிலையில் தென்­னி­லங்கை அர­சியல் தலை­வர்கள். தாங்கள் எதற்கும் எவ­ருக்கும் கட்­டுப்­பட வேண்­டி­ய­வர்கள் இல்லை என்று மகா சங்­கத்­தி­னரில் ஒரு கணி­ச­மான பிரி­வினர் நினைக்­கி­றார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு பௌத்த மதத்­துக்கு முதன்­மை­யான இடத்தைக் கொடுத்­தி­ருப்­ப­துடன் புத்த சாச­னத்தை பேணிப் பாது­காத்து வளர்க்க வேண்­டி­யது அரசின் கட­மை­யென்றும் கூறு­கி­றது. அர­சி­ய­ல­மைப்பில் உள்ள இந்த ஏற்­பாட்டை இந்தப் பிக்­குமார் நாட்டின் ஏனைய பிர­ஜை­களை விடவும் தங்­க­ளுக்கு சட்ட ரீதி­யாக விசேட அந்­தஸ்த்தை வழங்­கு­கின்ற ஒன்­றாக அர்த்­தப்­ப­டுத்திக் கொள்­கி­றார்கள் போலும்.சட்­டத்­துக்கு மேலா­ன­வர்­க­ளாக பிக்­குமார் இருக்க முடி­யு­மென்று புத்த பெருமான் ஒரு­போ­துமே போதிக்­க­வில்லை. தலையை மொட்டை அடிப்­பதன் மூலம் மாத்­திரம் ஒருவர் பிக்­கு­வாக மாறு­வ­தில்லை என்று புத்த பெரு­மானே கூறி­யி­ருக்­கிறார். அதே­போன்று காவி­யு­டையை அணி­வதன் மூலம் மாத்­திரம் ஒருவர் பிக்­கு­வா­கி­விட முடி­யாது. மக்­களும் பொலி­ஸாரும் இதைப்­பு­ரிந்து கொள்­வது அவ­சியம். பிக்கு ஒரு­வரின் தகு­திக்கு பொருத்­த­மில்­லாத எந்த நடத்­தை­யுமே பௌத்த மதத்­திலோ அல்­லது நாக­ரிக சமு­தா­யத்­திலோ சகித்துக் கொள்­ளப்­ப­ட­லா­காது. இரு மாதங்­க­ளுக்கு முன்னர் நியூ­யோக்கில் ஐக்­கிய நாடுகள் பொதுச்­ச­பையின் வரு­டாந்தக் கூட்­டத்­தொ­டரில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்­கையை தேர­வாத பௌத்­தத்தைக் கடைப்­பி­டித்து  புத்­தரின் போத­னை­களை அவற்றின் தொன்மை நலம் கெடாமல் பாது­காக்­கின்ற ஒரு நாடு என்று கூறிப் பெரு­மைப்­பட்டார். ஆனால்இ உண்­மை­யி­லேயே இலங்­கையில் பௌத்­த­மதம் ஒரு அர­சியல் மத­மாக்­கப்­பட்­டு­விட்ட துர­திர்ஷ்­ட­வ­ச­மான நிலை­யையே காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. நாட்டின் சுயா­தி­பத்­தியம்இ இறைமை என்­ப­வற்றை ஆட்சி நிறு­வன கட்­ட­மைப்பு மீதான சிங்­களஇபௌத்த மேலா­திக்கம் என்­பதைத் தவிர வேறு எது­வு­மாக பெரும்­பான்­மை­யான பிக்­குமார் விளங்கிக்  கொண்டிருப்பதாக தெரியவில்லை. 

சிங்­கள அர­சியல் சமு­தாயம் அதன் தவ­றான கொள்­கை­க­ளையும் செயற்­பா­டு­க­ளையும் நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கு மகா சங்­கத்­தி­னரைக் காலங் கால­மாகப் பயன்­ப­டுத்தி வந்­தி­ருப்­பதன் தவிர்க்க முடி­யாத ஒரு விளை­வா­கவே சட்­டத்தின் ஆட்­சிக்குத் சவால் விடுக்­கின்ற வகையில் அமைந்­தி­ருக்கும் பிக்­கு­மாரின் அடா­வ­டித்­த­ன­மான செயற்­பா­டு­களை நோக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. சிறு­பான்மைத் தேசிய இனங்­களின் நியா­ய­பூர்­வ­மான அர­சியல் அபி­லா­சை­களை நிரா­க­ரித்து அவர்­களின் உரி­மை­களை மறுக்­கின்ற இலங்­கையின் இனக்­கு­ழுமப் பெரும்­பான்­மை­வாத (நுவாniஉ ஆயதழசவையசயைnளைஅ) அர­சி­யலின் ஒரு ‘முன்­ன­ரங்கக் காவ­லர்­க­ளாக’ மகா­சங்­கத்­தினர் விளங்­கு­கி­றார்கள். சிறு­பான்­மை­ இனங்­­க­ளுக்கு எதி­ரான தங்­க­ளது செயற்­பா­டு­களை சிங்­கள பௌத்த சமு­தா­யத்தை  பாதுகாப்பதற்கான ­ஒரு  'புனிதக் கட­மை'­யாக அவர்கள் கரு­து­கி­றார்கள் போலும்.  சிறிய எண்­ணிக்­கை­யி­லான பிக்­குமார் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களின் உரி­மை­க­ளுக்கு ஆத­ர­வாகக் குரல் கொடுத்து வந்­தி­ருக்­கி­றார்கள் என்ற போதிலும்இ அவர்­க­ளினால் தங்கள் சமு­தா­யத்தில் எந்­த­வி­த­மான ஆரோக்­கி­ய­மான தாக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருந்­த­தில்லை.

பௌத்­த­மதம் உல­கிற்­கான அதன் செய்­தி­யாக அகிம்­சை­யையும் சமா­தா­னத்­தை­யுமே போதிக்­கி­றது. எந்­த­வி­த­மான வன்­மு­றை­யையும் உயிர்ச்­சே­தத்­தையும் பௌத்­த­மதம் ஏற்­றுக்­கொண்­ட­தில்லை. ஆனால்இ இலங்­கையில் சுமார் மூன்று தசாப்­தங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட போரில் அர­சாங்க ஆயு­தப்­ப­டை­களை மகா­சங்­கத்­தினர் ஆத­ரித்து ஆசீர்­வாதம் வழங்­கி­னார்கள். படைக்கலன்­க­ளுக்கு நூல் கட்­டிவிட்­டார்கள் 

அது­மாத்­தி­ர­மல்லஇ தமிழ்ப்­ப­கு­தி­களில் போர் முடி­வுக்கு வந்து பல வரு­டங்கள் கடந்­து­விட்ட பின்­னரும் கூடஇ இரா­ணு­வத்­தினர் பெரும் எண்­ணிக்­கையில் தொடர்ந்தும் நிலை கொண்­டி­ருப்­பதை ஆத­ரிப்­ப­வர்­க­ளா­கவும் மகா சங்­கத்­தினர் இருக்­கி­றார்கள். இது இவர்­களின் செயற்பாடுகளில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற ஒழுக்க நியாயப் பாரம்பரியக் குறைபாடாகும்.

இது இவ்வாறிருக்கஇ இனங்களுக்கிடையில் குரோதத்தை வளர்க்கக்கூடிய பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்ற தீவிரவாத பிக்குமாருடன் அரசாங்க அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருப்பது அவர்கள் தெரிவித்து வந்திருக்கின்ற கருத்துக்களுக்கும் முன்னெடுத்து வந்திருக்கின்ற செயற்பாடுகளுக்கும் ஒருவித ‘அரசியல் நியாயப்பாட்டை’ வழங்குவதாக அமைகிறது. பொதுபல சேனா போன்ற அமைப்புகள் அரசியல் அகராதியில் ‘விளிம்பு நிலை இயக்கங்கள்’ (குசiபெந புசழரி) என்ற வகையைச் சார்ந்தவையாகவே ஆரம்பத்தில் இருந்தன.

அவை பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்களைக் கொண்டவையாகவோ அல்லது பெரும்பான்மையான மக்களினால் வரவேற்கப்படக்கூடிய கொள்கைகளைக் கொண்டவையாகவோ இருந்ததில்லை. ஆனால்இ அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் இத்தகைய இயக்கங்களுக்கு அனுசரணை வழங்கும் வகையில் நடந்துகொண்டு வந்த காரணத்தால் அவை வலுவான இயக்கங்கள்  என்ற வகையிலான தோற்றப்பாடு ஏற்படவாய்ப்பாகிப் போனது. இந்த இயக்கங்களின் தலைவர்கள் என்று கூறப்படுகின்ற தான் தோன்றித்தனமான பேர் வழிகளின் கருத்துக்களை பிரதான அரசியல் நீரோட்டத்தில் உள்ள கட்சிகளினாலும் தலைவர்களினாலும் கூட நிராகரித்து விட முடியாத ஒரு துரதிர்ஷ்டவசமான போக்கு  வளர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.  பொதுபல சேனா போன்ற இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக உறுதியான நடவடிக் கைகளை எடுக்காமல் மௌனம் சாதித்ததுமாத்திரமல்ல அவற்றை ஊக்குவிக்கும் வகையிலும் நடந்துகொண்டதால் ராஜபக் ஷ ஆட்சி அதற்கான விலையை கடந்த வருட ஜனாதிபதி தேர்தலில் செலுத்த வேண்டியிருந்தது. அந்த அரசாங்கத்தின் கீழ் சட்டத்தின் ஆட்சி சீர் குலைந்து போயிருந்தது என்று நாட்டு மக்களுக்கு கூறி வாக்குக் கேட்டு அதிகாரத்துக்கு வந்த இன்றைய அரசாங்கமும் இனங்களுக்கிடையில் குரோதங்களைத் தூண்டிவிடும் வகையில் செயற்படுகின்ற தென்னிலங்கை இயக்கங்கள் தொடர்பில் மௌனம் சாதித்தால் அதே விலையைச் செலுத்த வேண்டிவரும் என்பதை மனதிற்கொள்வது அவசியம்.