கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரும்புத் திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கன்னா, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் சர்தார் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியானது.
சர்தார் படத்தில், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், முனிஷ்காந்த், அஷ்வின் குமார் மற்றும் யூகி சேது ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படமும் வெளிவந்ததால் இரு படங்களுக்கும் இடையே நல்ல போட்டி காணப்பட்டது.
இருப்பினும் விமர்சன ரீதியில் சர்தாருக்கு பாசிடிவான ரிவ்யூக்கள் கிடைத்தன. அதே நேரம் பிரின்ஸ் படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்ததால், மறுநாள் முதற்கொண்டு பிரின்ஸ் திரையிடப்பட்ட தியேட்டர்கள் குறைக்கப்பட்டு, சர்தாருக்கு ஸ்க்ரீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
வார நாட்களிலும் சர்தார் திரைப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியதால் வசூல் தாறுமாறாக எகிறியது. முக்கியமான காட்சிகள் நல்ல டீடெய்லிங்குடன் அமைந்திருப்பதாக இயக்குனர் மித்ரனுக்கு பாராட்டுகள் குவிந்தன.
படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் லான்சன் டொயோட்டா காரை பரிசளித்தார்.
மேலும், சர்தார் படத்தின் அடுத்த பாகம் வெளிவரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் உலகம் முழுவதும் சர்தார் திரைப்படம் ரூ. 100 கோடியை தாண்டி வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் வெற்றி பெற்றிருப்பதால் ஹாட்ரிக் வெற்றியை கார்த்தி பதிவு செய்துள்ளார். விரைவில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM