இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வேண்டிய மக்கள் பிரகடனம்..!

Published By: Digital Desk 5

07 Nov, 2022 | 02:53 PM
image

(அ . அச்சுதன்)  

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ்பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாள் மக்கள் பிரகடனம். 

8 கார்த்திகை நாளை 2022 அன்று காலை 10.30 மணிக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது என்பதனை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் அறியத்தருகின்றது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு அமைகின்றது.

'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல் முனைவுடைய மக்கள் குரலானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் இவ்வருடம் ஆவணி முதலாம் திகதி முதல் இன்று வரை நடைபெற்றுவருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.

குறிப்பாக,1948 இற்கு பின் இலங்கையில் ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகள் தமிழ் மக்கள் தமது திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு வந்த இனவாத அடிப்படையிலான அரசியல், பொருளாதார, சமூக, இன ரீதியான அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளின் காரணமாகவே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துள் மாகாண முறையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும், தமிழ் மொழியும் அரச கரும மொழியாக அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. 

எனினும், திட்டமிட்ட வகையில் சிங்கள பேரினவாத சக்திகளால்  2006ல் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகு பிரிக்கப்பட்டு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக்கப்பட்டன.

1987இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கை மூலமான 13வது திருத்தச் சட்டம் ; உருவாக்கப்பட்டு இற்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்தக் கால இடைவெளியில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன் தமிழர்கள் மீது போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

தொடர் இடப்பெயர்வு மற்றும் பல வருட கால அகதிமுகாம் வாழ்வை அனுபவித்தனர். போரினால் இருப்பிடம் களும், சொத்துக்களும், வாழ்வாதாரங்களும் மரங்கள்  உட்பட முற்றாக அழிக்கப்பட்டன. 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 

இராணுவமயமாக்கம், திட்டமிட்ட முறையில் நில அபகரிப்பு, மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தல் இன்றுவரையில் தமிழ் சமூகம் எதிர்கொண்டு வருகிறது.

எனவே, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எதிர்கொண்டு வரும் அரசியல் அடக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவந்து, சுய கௌரவமுள்ள உரிமைகளுடன் கூடிய வாழ்வு வாழ்வதற்கு அடிப்படையான நிலைபேறான அரசியல் தீர்வொன்றின் அவசியத்தை வலியுறுத்துகிறோம். 

அந்த அடிப்படையிலேயே வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் 100 நாள் செயல்முனைவானது 'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் மக்கள் குரலின் ஊடாக முன் வைக்கப்படும் மக்கள் பிரகடனமாகவே 'ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு' என்பது அமைந்துள்ளது.

எனவே வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இம் மக்கள் பிரகடனத்திற்கான ஒன்று கூடலில் அனைவரும் பங்கேற்று தமிழ் பேசும் மக்களின் கோரிக்கையை ஒரே குரலில் ஓங்கி ஒலிக்குமாறு கோருகிறோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 08 மாவட்டங்களிலும் கீழ் குறிப்பிடப்படும் இடங்களில் மக்கள் பிரகடனக் கூடல்கள் இடம்பெறும்.என அவர்களின் ஊடக அறிக்கை அமைந்திருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள்...

2024-04-12 21:41:41
news-image

ஞானசாரருக்கு நாளை விடுதலை இல்லை!

2024-04-12 21:00:04
news-image

புதுக்குடியிருப்பில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பலி...

2024-04-12 18:49:17
news-image

அண்ணனின் தாக்குதலில் தம்பி உயிரிழப்பு :...

2024-04-12 18:36:53
news-image

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2024-04-12 18:22:35
news-image

இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் 200 கிலோ...

2024-04-12 17:53:23
news-image

கொவிட் தொற்றினால் குருணாகல் வைத்தியசாலையில் ஒருவர்...

2024-04-12 17:36:50
news-image

இலங்கையுடனான பாதுகாப்பு இராஜதந்திரத்தை தீவிரப்படுத்தும் இந்தியா...

2024-04-12 09:10:18
news-image

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய...

2024-04-12 16:57:02
news-image

யாழில் இடம்பெற்ற விபத்தில் தொழில் வழிகாட்டல்...

2024-04-12 16:50:32
news-image

ஜூலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு -...

2024-04-12 08:58:25
news-image

'சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கு புத்தாண்டு'  -...

2024-04-12 08:51:18