அழகு நிலையத்தில் ஏற்படும் பக்கவாத நோயும் அதற்கான தீர்வும்

Published By: Nanthini

07 Nov, 2022 | 02:07 PM
image

ன்றைய சூழலில் விலைவாசி உயர்வின் காரணமாக எமது இல்லங்களில் வசிக்கும் கணவன் - மனைவி என இருவரும் பணிக்குச் சென்று, வருவாய் ஈட்ட வேண்டிய கட்டாய சூழல் நிலவுகிறது. 

பெண்கள் அலுவலகம், தொழிலகம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும்போது தங்களது தோற்றப்பொலிவு குறித்து கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது இயல்பு. 

இந்நிலையில் எம்மில் சிலர் தங்களது அழகை மேம்படுத்திக்கொள்ள அழகு நிலையங்களுக்கு செல்வதுண்டு. 

இத்தகைய அழகு நிலையங்களில் ஆபத்தும் உண்டு என்பதை மருத்துவத்துறையும் சுகாதார துறையும் தொடர்ந்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறது. 

அண்மையில் தென்னிந்தியாவில் அழகு நிலையமொன்றில் ஒரு பெண்மணி சிகை அலங்காரத்தில் ஈடுபட்டிருக்கும்போது பக்கவாத பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 

இது அரிதான நிகழ்வு என்றாலும், தற்போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிலவுவது உலகளவில் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அழகு நிலையத்தில் ஏற்படுகிற பக்கவாத நோய் குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கமளிக்கையில், 

''பிறக்கும்போது கழுத்திலிருந்து தலைப்பகுதிக்கு செல்லும் தமனிகளில் ஒருபுறம் மெல்லியதாகவும், மறுபுறம் சற்று இயல்பான தடிமன் கொண்டதாகவும் அமைந்திருக்கும். 

இவர்களுக்கு நாளடைவில் கழுத்துப் பகுதியில் குருதி அழுத்த பாதிப்பு ஏற்பட்டால், மென்மையான பகுதி கொண்ட தமனியில் இதன் பாதிப்பு எதிரொலிக்கும். 

அத்தருணங்களில் அந்த தமனி வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை அல்லது இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு பக்கவாத பாதிப்பு உண்டாகிறது'' என்கின்றனர்.

அழகு நிலையங்களுக்குச் சென்று சிகை அலங்காரம் செய்துகொள்வதற்கு முன் தலையை பிரத்தியேகமாக கழுவும்போது அவர்கள் கழுத்தை பின்பக்கமாக சாய்த்துக்கொள்கிறார்கள். இதன் போது மூளைக்குச் செல்லவேண்டிய இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு பக்கவாத நோய் உண்டாகிறது.

இத்தகைய பக்கவாத பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே அவர்களுக்கு உடல், சில அறிகுறிகளை ஏற்படுத்தும். 

குறிப்பாக அடிக்கடி தலைசுற்றல், குமட்டல் அல்லது வாந்தி போன்ற உணர்வு உண்டாகும். 

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டவர்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று, சிகை அலங்காரத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் அல்லது கழுத்தை குறிப்பிட்ட கோணத்துக்கப்பால் பின்னோக்கி சாய்க்கக்கூடாது. 

மேலும், பக்கவாதம் ஏற்படின், அல்லது அறிகுறி தென்படின் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள  வேண்டும். இதற்கான பிரத்தியேக சிகிச்சையின் மூலம் பக்கவாதத்துக்கு முழுமையான நிவாரணத்தை பெற்றாலும், பக்கவாத பாதிப்பு என்பது மீண்டும் ஏற்படக்கூடிய ஆபத்தான நோய் என்பதால், இந்த விடயத்தில் மருத்துவர்களின் பரிந்துரையை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

- டொக்டர் தீப்தி

(தொகுப்பு அனுஷா)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஃபோர்மில்க் டயரியா' எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-03-26 15:27:52
news-image

இன்சுலின் செலுத்திக்கொள்வதால் பக்க விளைவு உண்டாகுமா?

2025-03-25 15:50:06
news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15