வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும், மக்கள் போராட்டம்

Published By: Vishnu

07 Nov, 2022 | 12:48 PM
image

ஹஸ்பர்

100 நாட்கள் செயல்முனைவின்  99 ஆவது நாள் மக்கள் குரல் திருகோணமலை மாவட்டத்தில்  விலாங்குள கிராமத்தில் இன்று (07) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊர்வலமாக பதாகைகளை ஏந்தியவாறு தங்களது கோரிக்கைகளை எழுப்பினர்.

இந் 100 நாட்கள் செயல்முனைவின் 99ம் நாள் போராட்டத்தில்  திருமலை பிரதேசத்தில் உள்ள  பிரதேச பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள்  வலையமைப்பு உறுப்பினர்கள், சிறுகுழுக்களின் உங்கத்துவர்கள், ஆண்கள்  மற்றும் சிவில்  அமைப்புப்  பிரதிநிதிகள்  என  பலர்  கலந்து கொண்டனர்.

“வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” “ நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை. 

இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ” “ வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்” “ 13 வது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது ” பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை இல்லாதொழிப்போம்” எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு  எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தினை  கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை இதன் போது முன்வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

எமது  வடக்கு  கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வடக்கு  கிழக்கு  பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு  நீதியுடன்  கூடிய  அரசியல்  தீர்வு வேண்டி முன்னெடுக்கப்படும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு பெரும் சவாலாக இலங்கை அரச  படைப்பிரிவினரும், இலங்கை படைப்பிரிவுகளின் புலனாய்வினர்களும் செயற்படுவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகவே நாம் கருதுவதுடன், பாதிக்கப்பட்ட மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் உரிமைக்கான  குரல் வளையை  நசிக்கும் செயலாகவே நாம் இதனை கருதுவதுடன், இவ்வாறான  செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அத்துடன் எமது “வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்”  எனும்  ஜனநாயக ரீதியான மக்கள் குரலுக்கு மேன்மை தங்கிய இலங்கை சனாதிபதி அவர்கள் உதவ வேண்டும் எனவும் கோருகின்றோம் எனவும் இதன் போது மேலும் கருத்து தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55