தென்னாப்பிரிக்காவின் அரிய கனிம வளங்களை இந்தியா பயன்படுத்த வேண்டும்: எக்ஸிம் வங்கி அறிக்கை

Published By: Digital Desk 5

07 Nov, 2022 | 12:35 PM
image

முக்கியமான அரிய கனிமங்கள் உற்பத்தி செய்யப்படும் தென்னாப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா மூலோபாய கூட்டணியை உருவாக்க வேண்டும் என ஏற்றுமதி - இறக்குமதி இந்திய வங்கி (எக்சிம் வங்கி) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா வளர்ச்சி கூட்டாண்மை குறித்து 'தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியாவின் ஈடுபாடுகளை மீண்டும் புதுப்பித்தல்' என்ற தலைப்பில் ஜோகன்னஸ்பர்க்கில் எக்சிம் வங்கி அறிக்கை வெளியிட்டது. இதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் மற்றும் ஆப்பிரிக்க அபிவிருத்தி வங்கி ஆகியவை தென்னாபிரிக்க நாடுகளின் அரசாங்கங்களுடன் நெருக்கமாக இணைந்து இந்த அரிய கனிம வளங்களை மேம்பாட்டு முயற்சிகளின் வணிக தேவைகளைப் புரிந்துகொண்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் லித்தியம், கிராஃபைட், கோபால்ட், வெள்ளை உலோகம், தாமிரம் மற்றும் பிற அரிய கனிமங்கள் நிறைந்துள்ளன.

இவை அனைத்தும் எதிர்காலத்தில் உலகளாவிய பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இன்றியமையாதவையாகும். புதிய சந்தை வாய்ப்புகளையும் கொண்டிருக்கின்றன. எனவே, பேட்டரி மற்றும் மின்சார மதிப்பு சங்கிலியின் தேவையிலிருந்து நன்மைகளை மேம்படுத்த ஆப்பிரிக்க சுரங்க மதிப்பு சங்கிலியில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும்.

பசுமையான பொருளாதாரத்தை நோக்கி இந்தியா தனது சொந்த நகர்வுகளில் இதன் மூலம் பயனடையலாம். முக்கியமான கனிம சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா கூட்டு ஆய்வு நடவடிக்கைகளை அமைக்கலாம். 2030 ஆம் ஆண்டளவில் மின்சார வாகனங்களை பெருமளவில் ஏற்றுக் கொள்வதில் இருந்து இந்தியாவின் திட்டத்தை தூண்டக்கூடிய லித்தியம் மற்றும் கோபால்ட் போன்ற சிறிய கனிம சொத்துக்களைப் பாதுகாக்க இந்திய அரச நிறுவனங்கள் கூட்டு முயற்சியை உருவாக்கலாம்.

கோபால்ட் மற்றும் லித்தியத்திற்கான இந்தியாவின் இறக்குமதித் தேவைகளை உறுதி செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் அந்தந்த நாடுகளுடன் மூலோபாய முதலீட்டு நிதிகள் அல்லது இறக்குமதி கடன் வரிகளை அமைக்கலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08