கமல் ஹாசனின் பிறந்த நாள் இன்று : நடிப்புக்கு சவால் விடும் கலைஞன்!

By Digital Desk 2

07 Nov, 2022 | 10:58 AM
image

உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தனது 68ஆவது பிறந்தநாளை  கொண்டாடுகின்றார்.

நடிப்புக்குச் சவால் அளிக்கும் கதைகளைத்தான் கமல் எப்போதும் தெரிவு செய்தவர். இளைஞனாக, காதல் இளவரசனாக இருந்த 80களிலேயே அவரால் நடிக்குச் சவால் அளிக்கும் படங்களில் நடிக்க முடிந்தது. இதனால் அவருடைய திரை வாழ்க்கை முழுக்க விருதுகள் அவரைத் தேடி வந்தன. கமல் விருது வாங்காத வருடம் என்று ஏதாவது இருக்குமா என்பது சந்தேகமே. 

1980களில் மூன்றாம் பிறை, நாயகன் படங்களுக்காகத் தேசிய விருதுகளை வென்ற கமல், அடுத்ததாக 90களில் இந்தியன் படத்துக்காக மேலும் ஒரு தேசிய விருதை வென்றார். அதற்கு முன்பு 1960 இல் களத்தூர் கண்ணம்மா படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய குடியரசுத் தலைவர் விருதையும் வென்றார்.

 மெய்யப்பச்செட்டியாரின் கண்பட்டு பீம்சிங் இயக்கிய ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் 5வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியதையடுத்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

அதேபோல 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், இந்தியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் ஆகிய படங்களுக்காக மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதுகளையும் வென்றுள்ளார். கவனித்துப் பார்த்தால் 1970களில் ஆரம்பித்து தொடர்ந்து மாநில அரசு விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். 

தெலுங்கிலும் மூன்று மாநில அரசுகளை வென்றுள்ளார், சாகர சங்கமம், ஸ்வாதி முத்யம், இந்துருடு சந்துருடு ஆகிய படங்களுக்காக.

மூன்றாம் பிறை, நாயகன், மைக்கேல் மதன காமராஜன் படங்களுக்காக சினிமா எக்ஸ்பிரஸின் சிறந்த நடிகருக்கான விருதைகளை வென்றுள்ளார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிக முறை வென்ற நடிகர் என்கிற பெருமையும் கமலுக்கு உண்டு. ஏக் துஜே கே லியே படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற கமல், சாகர் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றார். 

ஃபிலிம்ஃபேர் செளத் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை 17 முறை வென்றுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்குப் படங்களுக்காகவும் விருதுகளை வென்றுள்ளார். 

மஹாராஷ்டிர அரசின் சாந்தாராம் விருதை நான்கு முறை வென்றுள்ளார். பம்மல் கே. சம்பந்தம், அன்பே சிவம் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அன்பே சிவம் படத்துக்காக சிறந்த கதை மற்றும் திரைக்கதைக்கான விருதும் சிறந்த பாடகருக்கான விருதும் வென்றார். 

 பரமக்குடி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் தொடக்க கல்வியை தொடங்கிய கமல் பிறகு சென்னை வந்ததும் திருவல்லிக்கேணியில் உள்ள இந்து ஹை ஸ்கூலில் படித்தார். ஆனால், பட தொடர்ந்து வாய்ப்புகள் வரவே பள்ளி செல்ல நேரமில்லாததால் வீட்டிற்க்கே ஆசிரியரை வரவைத்து தனது படிப்பை தொடர்ந்தார்.

1985 முதல் 2000 வரை கமல் கதாநாயகனாக நடித்த ஏழு படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லை. (அமீர் கான் படங்கள் - 4) கமலின் ஆஸ்கர் கனவு தீவிரமாக இருந்த சமயம் அது. இருந்தாலும் குணா, மகாநதி, அன்பே சிவம் போன்ற கமலின் முக்கியமான படங்களுக்கு இந்தப் பாக்கியம் கிட்டவில்லை.

1990இல் பத்மஸ்ரீ, 2014இல் பத்ம பூஷன் விருதுகளை கமலுக்கு வழங்கியது மத்திய அரசு. பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதை 2016இல் வென்றார். 

கமலுக்குத் தேசிய விருதுகளை அளித்த படங்கள்

மூன்றாம் பிறை (1982)

1977இல் 16 வயதினிலே படத்துக்காக கமலுக்குக் கிடைத்த பாராட்டும் அப்படத்தின் வெற்றியும் கமலுக்கு அதிக நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். இதன் அடுத்தக் கட்டமாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படம் தான் மூன்றாம் பிறை. நடிப்புத் திறமைக்காக ஒரு படத்தைப் பார்த்து ரசிக்க முடியுமா என்றால் அது இந்தப் படம் தான். படம் முழுக்க சீனுவாக கமலும் விஜியாக ஸ்ரீதேவியும் போட்டிப் போட்டு நடித்த படம். 

தமிழ்த் திரையுலகில் சர்வதேசத் தரத்துடன் படங்கள் வெளிவர வேண்டும் என்கிற பாலுமகேந்திராவின் கனவின் வெளிப்பாடு தான் மூன்றாம் பிறை. ஸ்ரீதேவியின் நடிப்பும் இளையராஜாவின் இசைக்கும் தேசிய விருதுகள் கிடைக்காமல் போனாலும் கமலின் நடிப்புக்கும் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவுக்கும் அங்கீகாரம் அளித்தது தேசிய விருதுக்கான தேர்வுக்குழு. தமிழக அரசு இருவருக்கும் விருதுகள் அளித்ததுடன் ஸ்ரீதேவி, கே.ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி ஆகியோரின் திறமைக்கும் மதிப்பளித்து விருதளித்தது.

 குழந்தை நட்சத்திரமாக நடித்த போதிலும் கமலுக்கு நடனம் மீது அதீத காதல் இருந்ததாம். சிறு வயதிலே ‘குச்சிப்புடி' நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட கமலுக்கு எம்.எஸ்.நடராஜனிடம் அந்நடனத்தை கற்றுக்கொண்டார். பின்னாளில் அவரின் அரங்கேற்றத்தில் ஏற்ப்பட்ட விபத்திற்கு பிறகு கமலால் இனி நடனமே ஆட முடியாது என்றாகியது.

முதல் தேசிய விருது அளித்த குஷியில் இனி நடிப்புத் திறமையுள்ள கதையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்கிற கமலின் முடிவுக்கு அடுத்த 14 வருடங்களில் மேலும் இரு தேசிய விருதுகள் கிடைத்தன. 

நாயகன் (1987)

தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படம். கமல், மணி ரத்னம், பி.சி. ஸ்ரீராம், இளையராஜா எனப் பல திறமைகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பங்களித்த படம். 

சிறந்த நடிப்பு (கமல்), சிறந்த ஒளிப்பதிவு (பி.சி. ஸ்ரீராம்), சிறந்த கலை இயக்கம் (தோட்டா தரணி) என மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.

கமலின் நடிப்பை என்னவென்று சொல்வது? கோபக்கார இளைஞனாகவும் வேலு நாயக்கராக மும்பை தமிழ் மக்களின் பாதுகாவலராகவும் வெவ்வேறு விதமான நடிப்பை வழங்கி அசத்தினார் கமல். இன்றைக்குப் பார்த்தாலும் கமலின் நடிப்பை வியக்காமல் இருக்க முடியாது. மிகச்சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த இந்தியப் படமாகவும் மதிப்பிடப்படும் நாயகன், கமலின் அசுரப் பாய்ச்சலுக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. 

Kamal Haasan - IMDb

இந்தியன் (1996)

நாயகனுக்குப் பிறகு பல படங்களில் நடிப்பில் பல்வேறு பரிமாணங்களை கமல் வெளிப்படுத்தினாலும் தேசிய விருதின் அருகில் செல்ல முடியாமல் போனது. ஆனால் 1996-ல் வெளிவந்த ஷங்கர் இயக்கிய இந்தியன் படம், கமலுக்குத் தேசிய விருதை வழங்கியது.

இரு வேடங்கள் செய்திருந்தாலும் தேசிய விருது என்னவோ இந்தியன் தாத்தாவுக்குத்தான். நாட்டைச் சீரழிக்கும் லஞ்சத்தை அடியோடு வேரறுக்கும் இந்தியன் தாத்தா வேடத்தை அற்புதமாகச் செய்திருந்தார் கமல். தன் மகள் கஸ்தூரி சாகும்போதும் தனது மகனைக் கொல்லும்போது நடிப்பால் ரசிகர்களைக் கலங்க வைத்தார். இதை விடவும் இன்னொருவரால் சிறப்பாக நடித்துவிட முடியாது என்கிற அளவுக்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதால் மூன்றாவது தேசிய விருது கமலுக்குக் கிடைத்தது.

Kamal Haasan biography, wiki, age, height, caste, religion, educational  qualification

 வீட்டில் வேலையின்றி இருந்தபோது தனது வீட்டருகே இருந்த பார்பர் ஷாப்பில் வேலை செய்திருக்கிறார் கமல். பிறகு தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக சேர்ந்தார் கமல். அதன்பின் ‘சவாலே சமாளி’ திரைபடத்தில் சிவாஜிக்கும், ‘நான் ஏன் பிறந்தேன்’ திரைபடத்தில் எம்.ஜி.ஆருக்கும், ‘அன்பு தங்கை’ படத்தில் ஜெயலலிதாவுக்கும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார் கமல்ஹாசன்.

 1954 நவம்பர் 7ஆம் தேதி அன்று வழக்கறிஞர் ஸ்ரீனிவாச ஐயங்கார், ராஜலக்‌ஷ்மி நான்காவது பிள்ளையாக பிறந்தவர் தான் கமல்ஹாசன். கமலின் இயற்பெயர் ‘பார்த்தசாரதி’ ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி' வாணி...

2023-02-04 16:05:03
news-image

குத்தாட்ட நடிகையான ரித்திகா சிங்

2023-02-04 13:31:25
news-image

தலைக்கூத்தல் - திரை விமர்சனம்

2023-02-03 17:33:34
news-image

இயக்குநரும், நடிகருமான கே. விஸ்வநாத் மறைவு

2023-02-03 16:37:15
news-image

நடிகர் மகத் ராகவேந்திரா நடிக்கும் 'காதல்...

2023-02-03 13:29:14
news-image

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும்...

2023-02-03 13:29:59
news-image

சிலம்பரசன் நடிக்கும் 'பத்து தல' படத்தின்...

2023-02-03 13:30:40
news-image

பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்...

2023-02-03 13:31:10
news-image

மீண்டும் வலைத்தள தொடரில் நடிக்கும் சமந்தா

2023-02-02 12:46:37
news-image

மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகும் 'கிறிஸ்டி'...

2023-02-02 12:08:57
news-image

'தளபதி 67' படத்தின் தொடக்க விழா...

2023-02-02 11:48:28
news-image

சந்தானம் நடிக்கும் 'கிக்' படத்தின் மூன்றாவது...

2023-02-02 11:48:09