(ரொபட் அன்டனி)

ஐக்கியதேசியக்கட்சியுடன் நான்  எவ்விதமான ரகசியப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை.  சிறிலங்கா சுதந்திரக்கட்சிதான்   ஐக்கிய தேசியக்கட்சியுடன் உடன்படிக்கை செய்து  இணைந்து  அரசாங்கம் அமைத்துள்ளது.  மாறாக  நாங்கள்  ஐ.தே.க. வுடன்   டீல்போடவில்லை   என்று  சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதியும்   முன்னாள் அமைச்சருமான  பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். 

எமது  புதிய கட்சியானது  14 கட்சிகளுடன்  பேச்சுவார்த்தை  நடத்தி வருகிறது.  அவ்வாறு   பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இணக்கப்பாடுகள் எட்டப்படும் சந்தர்ப்பத்தில் நாங்கள் இணைந்து பயணிப்போம். ஆனால்  அந்த 14 கட்சிகளில்  ஐக்கிய தேசியக்கட்சி இல்லை எனவும்  அவர் குறிப்பிட்டார். 

பஷில் ராஜபக்ஷ ஐக்கிய தேசியக்கட்சியுடன் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா  தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.