(இராஜதுரை ஹஷான்)
தேர்தல் முறைமை திருத்தம்,எல்லை நிர்ணய அறிக்கை ஆகிய காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலை அரசாங்கம் பிற்போட முயற்சித்தால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம் என சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு (பெப்ரல்) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராட்சி தெரிவித்தார்.
எல்லை நிர்ணய குழு நியமனம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசியல் களத்தில் மாறுப்பட்ட பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.
எல்லை நிர்ணய குழு நியமனம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு ஒரு காரணியாக அமைந்து விடக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.

தேர்தல் முறைமை திருத்தம் செய்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பு அவதானத்திற்குரியது. 2018 ஆம் ஆண்டு எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து மாகாண சபை தேர்தலை நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது, இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது.
09 மாகாண சபைகளும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி செயற்படுகிறது. ஜனநாயகம் தொடர்பில் கருத்துரைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது அவசியமற்றது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் செயற்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெறுகிறது.
தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும்,ஆனால் அதற்கான தருணம் இதுவல்ல, நாட்டு மக்கள் தேர்தலை கோருகிறார்கள். இவ்வருடம் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை ஒரு வருட காலம் பிற்போடப்பட்டது. நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்குள் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் முறைமை திருத்தம், எல்லை நிர்ணய அறிக்கை ஆகிய காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம். உள்ளுராட்சி மன்ற சபை தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் நாளை விசேட பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM