இந்த வரு­டத்தின் கடந்த 11 மாதங்­களில் 2360 வீதி விபத்­துக்­களில் 2538 பேர் மர­ணித்­துள்­ள­தாக வீதி பாது­காப்பு தொடர்­பான தேசிய சபை அறி­வித்­துள்­ளது. இதில் 760பேர் மோட்டார் சைக்கிள் விபத்து மூலம் மர­ணித்­துள்­ள­துடன் 726பேர் நடை பய­ணி­க­ளாகும் என்றும் சபை அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக வீதி பாது­காப்பு தொடர்­பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோத்­தா­கொட குறிப்­பி­டு­கையில்,

வேக­மாக அதி­க­ரித்து செல்லும் வீதி விபத்து கார­ண­மாக நாௌான்றுக்கு 6,7 பேர் வரை மர­ணிப்­ப­துடன் காய­ம­டை­ப­வர்­களின் எண்­ணிக்கை நாளாந்தம் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றது. வீதி விபத்­துக்கள் மூலம் மரணம் மற்றும் காயம் ஏற்­ப­டு­கின்­ற­வர்­களின் எண்­ணிக்­கையை கட்­டுப்­ப­டுத்த மக்­களை பாது­காக்­கின்ற வீதி கட்­ட­மைப்­பொன்றை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம்.

அத்­துடன் அதி­க­மான விபத்­துக்கள் ஏற்­ப­டு­கின்ற வீதி­களின் பாது­காப்பை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம். அதி­க­மான விபத்­துக்கள் ஏற்­ப­டு­கின்ற வீதி­களின் கணிப்­பீட்டின் அடிப்­ப­டையில் கல்­கிஸை பொலிஸ் வட்­டா­ரத்தில் மெலிபன் சந்­தி­யி­லி­ருந்து தெஹி­வளை பொலிஸ் வட்­டா­ரத்தில் கௌடான சந்தி வரை­யான 3.1 கிலோ­மீட்டர் பகு­தியில் அதி­க­மான வீதி விபத்­துக்கள் இடம் பெற்­றுள்­ள­தாக பதி­யப்­பட்­டுள்­ளது. அதன் கார­ண­மாக அந்த பகு ­தி­களில் வீதி பாது­காப்பு தொடர்­பான அறி­வித்தல் பலகை மற்றும் வேறு நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக மேற்­கொள்­ளு­மாறு வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளோம்.

மேலும் மெலிபன் சந்தி முதல் கௌடான சந்தி வரை­யான பகு­தியில் அதி­க­மான வீதி விபத்­துக்­க­ளுக்கு அடிப்­படை கார­ண­மாக அமைந்­தி­ருப்­பது அந்த பாதையில் பாது­காப்பு வேலி இல்­லா­மையும் புவியியல் ரீதியில் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையுமாகுமென மேற் கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரிய வருகின்றது என அவர் மேலும் தெரி வித்துள்ளார்.