logo

பூமியில் மிகக் குளிரான நகரமான யக்கூத்தியாவில் வாழும் முஸ்லிம்கள்

Published By: Digital Desk 5

06 Nov, 2022 | 04:17 PM
image

லத்தீப் பாரூக்

ரஷ்யாவின் கீழ் வரும் ஷக்ஹா அல்லது யக்கூஸா குடியரசின்; தலைநகரம் தான் யக்கூட்ஸ் அல்லது யக்கூத்தியா நகரம். இந்தப் பூமியில் மிகவும் குளிரான நகரம் இதுவேயாகும். சக்ஹா குடியரசு என்றும் அழைக்கப்படும் யக்கூஸா குடியரசு ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியத்தில் ஆக்டிக் சமுத்திரத்தை அண்மியதாக அமைந்துள்ளது. 

இதன் சனத்தொகை வழித்தோன்றலில் முஸ்லிம்கள் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றார்கள். 2019இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி யக்கூஸா உட்பட ரஷ்யாவின் ஆக்டிக் பிராந்தியத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது.

யக்கூஸா சிறியதொரு சனத்தொகையைக் கொண்ட நாடு. இங்குள்ள ஒவ்வொரு நபரும் அந்தப்பிரதேசத்துக்கு ஏதோவொரு வழியில் புதிதாக வருகை தந்தவர்கள். அந்த வகையில் வேகமாக மாற்றம் கண்டு வரும் சமூக-பொருளாதார சூழலில் முஸ்லிம்கள் மற்றவர்களோடு வேகமாக இரண்டறக் கலந்துவிட வசதியாக உள்ளது.

அதற்காக முஸ்லிம்கள் இங்கு எந்த கவலைகளுக்கும் முகம் கொடுக்கத் தேவையில்லை என்று அர்த்தமல்ல. வழமைபோல் தமது இஸ்லாமிய அடையாளங்களை வெளிப்படுத்துகின்றபோது நகர அதிகாரிகள் மற்றும் உள்ளுர் வாசிகளிடமிருந்து அவர்களுக்கு தொல்லைகள் எழவே செய்கின்றன. 

உதாரணத்துக்கு இங்குள்ள மக்களோடு ஒருங்கிணைந்து முஸ்லிமாக தம்மை அடையாளப்படுத்தி வாழ்வதற்கு அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. காரணம் இந்தப் பிரதேசமும் அதன் மக்களும் மிக நீண்ட காலமாக சமயச்சார்பற்ற போக்கினைப் பின்பற்றுகின்றவர்கள். இந்தப்போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. அங்கு வாழும் முஸ்லிம்கள் தமக்கென பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்ள முயன்ற போது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

1996இல் யக்கூஸாவில் முதலாவது பள்ளிவாசலை நிர்மாணிக்க முழுக்க முழுக்க முஸ்லிம்களினதும் முஸ்லிம் முதலீட்டாளர்களினதும் பங்களிப்பிலேயே அவர்கள் தங்கி இருக்க வேண்டியதாயிற்று. கடந்த காலங்களில் இந்தப் பள்ளிவாசல் விஸ்தரிக்கப்பட்டு 2012இல் உலகின் ஆக்டிக் பிராந்தியத்தின் மிகப் பெரிய பள்ளிவாசல் என்ற பெயரையும் பெற்றுக் கொண்டது.

தற்போது முழு வடிவம் பெற்றுள்ள அந்தப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை மற்றும் பெருநாள் தொழுகைகளுக்கு சுமார் ஐயாயிரம் பேர் கூடும் வகையில் அமைந்துள்ளது. இங்குள்ள இன்னொரு தென்பகுதி நகரமான நிர்யாங்கிரி நகரிலும் பள்ளிகளும் தொழுகை நடத்தும் இடங்களும் உள்ளன. இங்கிருந்து இஸ்லாமிய இதழ் ஒன்றும்; வெளிவருகின்றது.

இங்கு ஹலால் உணவு தாராளமாகக் கிடைப்பதில்லை. இந்தப் பிரச்சினையை சமாளிக்க பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிவாசலும் இறக்குமதித் துறையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் வர்த்தகர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளன. இவர்கள் ஹலால் இறைச்சி வகைகளை இறக்குமதி செய்து பள்ளிவாசல்கள் மூலமாக முஸ்லிம் குடும்பங்களுக்கு தனிப்பட்ட முறையில் விநியோகித்து வருகின்றனர்.

புனித ரமழான் மாதத்திலும் ஆக்டிக் பிரதேச மக்கள் பிரத்தியேகமான பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரதேசம் கோடை காலத்தில் 24மணி நேரத்தில் மிகக்குறைவான அளவு இருள்நேரத்தை அல்லது முற்றாக இருளில்லாத நிலையைக் கொண்டிருக்கும். அதேபோல் குளிர்காலத்தில் பகல்வெளிச்சம் என்பது முற்றாக இருக்காது அல்லது மிகக் குறைவாகவே இருக்கும். எனவே சூரிய ஒளியின் தாக்கத்தைக் கொண்டு நோன்பு நோற்பதற்கான கால அவகாசத்தைக் கணித்துக் கொள்வது மிகவும் கஷ்டமான விடயமாக இருக்கும்.

இவ்வாறான காலப் பகுதியில் சமய ரீதியான நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் வழங்கியுள்ள தீர்ப்புகளின் படி மூன்று வகையான முடிவுகளுக்கு வரலாம். ஒன்று அவர்கள் குறிப்பிட்ட ரமழான் மாத காலப்பகுதியில் நோன்பு இருப்பதால் மிகவும் பாரதூரமான செயல்முறை ரீதியான சுகாதாரப் பிரச்சினைகள் அல்லது தடைகள் ஏற்படுமாயின், அதேயாண்டில் காலநிலை கைகொடுக்கக் கூடிய வசதியான மாதத்துக்கு நோன்பு வைப்பதைப் பின்போடலாம். 

இரண்டாவதாக அவர்கள் தமக்கு மிக அருகில் வசிக்கும் முஸ்லிம் சமூகம் பின்பற்றுகின்ற காலநேரத்தைப் பின்பற்றலாம் அது நள்ளிரவு சூரியன் பிரச்சினைக்கு முகங்கொடுக்காததாக இருக்க வேண்டும். மூன்றாவதாக அவர்கள் புனித மக்கா நகரில் பின்பற்றப்படும் கால நேரத்தைப் பின்பற்றலாம்.

யக்கூத்தி பரம்பரை பற்றி பேசுகின்ற போது யார் இந்த மக்கள் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று பலர் வியப்படையலாம். உலகில் இந்த இனத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பது இலட்சம் மக்கள் வாழுகின்றனர். இந்த மக்கள் கூட்டத்தின் சிறப்பான இயல்புகளில் முக்கியமானது குதிரைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு. இன்னுமொரு பிரிவினர் வேட்டையாடுவதில் சிறப்பு பெற்றவர்கள்

இதனால் இவர்களது தினசரி உணவில் பால்; பண்ணை உற்பத்திகள் அடங்கியுள்ளமை ஆச்சரியமானதல்ல. பசுக்களில் இருந்தும் கலை மான்களிடமிருந்தும் இவர்கள் பாலைப்பெற்றுக் கொள்கின்றனர். அதேபோல் இவர்களது அன்றாட உணவில் மீன் வகைகளும் முக்கிய இடம்பிடிக்கின்றன.

ஷக்ஹா பிராந்தியத்தின் பிரதான கைத்தொழில்துறை சுரங்கத் தொழிலாகும். இந்தப்பிராந்தியத்தில் பொதிங்துள்ள வைரங்கள் உலக அளவில் பிரபலத்துக்கு காரணமாகின்றன. உலகின் மிகப்பெரிய வைரச்சுரங்கங்களில் பல இங்குதான் அமைந்துள்ளன. இதுதவிர, தங்கம், பாதரசம், நிலக்கரி உட்பட இன்னும் பல கனிம வளங்களும் தாராளமாகக் காணப்படுகின்றன.

பெரும்பாலான துருக்கியர்கள் முஸ்லிம்களாகக் காணப்பட்ட போதிலும் யாக்கூத் மக்களில் பொரும்பாலானவர்கள் பழமைவாத கிறிஸ்தவர்களாகவே காணப்படுகின்றனர். இந்த மக்களின் பாரம்பரிய உடைகள் மிருகங்களின் தோல் மற்றும் உரோமத்தால் ஆனவை. 

மோசமான காலநிலைக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவை அமைந்துள்ளன. கடந்த காலங்களில் ஒவ்வொரு நிலைமகளிலும் வெவ்வேறு வகையான உடைகள் அவர்களுக்கு உள்ள போதிலும் இந்த உடைகள் இப்போது கொண்டாட்டங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் துருவப்பகுதியின் விரிவான இந்த இஸ்லாமிய வளர்ச்சி இஸ்லாத்தின் தற்போதைய பூகோளமயமாக்கலில் ரஷ்யாவின் பாரிய பங்களிப்பு பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதையே உறுதி செய்கின்றது. முஸ்லிம் சனத்தொகையின் வளர்ச்சியோடு இரண்டாவது தலைமுறை குடியேற்றவாசிகளின் வெளிப்பாடு ரஷ்ய சமூகத்தோடு மிகநன்றாகவே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு மிகவும் சுறுசுறுப்பான மத்திய கிழக்கு கொள்கையோடு இஸ்லாத்தின் எதிர்காலத்தில் செல்வாக்கு செலுத்துவதிலும் மதிப்பீடு செயவதிலும் அத்தோடு அதன் ஐரோப்பிய அயலவர்களின் உறவுகளிலும் ரஷ்யா ஒரு சர்ச்சைக்குரிய நாடாகவும் மாறி உள்ளது.

மலர்ந்து வரும் இந்த துருவப்பிரதேச இஸ்லாம் அதன் பாரம்பரிய சமயப்பிரிவுகளில் இருந்து இன்னமும் பூகோள ரீதியாகப் பிளவுபடுத்தப்படவில்லை என்பதையே தற்கால நிலைமை உறுதி செய்கின்றது. வட கோகஸஸ் மற்றும் வொல்கா ஊரல்ஸ் ஆகிய பகுதிகளைப் போல் சகல நாடுகளினதும் தூர வடக்கு மற்றும் தூர கிழக்கு உட்பட பிரதான நகரங்களில் அது பரவி உள்ளது. 

ரஷ்ய அதிகாரபீடத்தைப் பொறுத்தளவில் இந்த மாற்றமானது தமது உள்ளுர் சிறுபான்மையினருக்கு இஸ்லாத்தை ஒரு மார்க்கமாக வெளிக்காட்ட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. விரிவானதொரு சமூக போக்கிற்கு அல்லது மனமாற்றத்துக்கு உரியதொரு விடயமாக இஸ்லாத்தை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

நகர சமூக நிலைமைகளை மீள வடிவமைத்தும், நாட்டின் தொழிற்படையோடு இரண்டறக்கலந்தும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் ஒரு மார்க்கமாக இஸ்லாத்தை அவர்கள் பார்க்க வேணடி உள்ளது. அந்த வகையில் ஆக்டிக் பிராந்திய நகரங்கள் ரஷ்யாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களில் முன்னணியில் திகழ்கின்றன. அதியுயர் மட்ட உணர்திறன் கொண்ட அடிமட்ட இயக்கவியல் மற்றும் இந்த சமூக மாற்றங்களின் நெகிழ்வுப் போக்கு என்பனவற்றோடு இணைந்ததாக இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் உலக அறிவிப்பாளர் அல்ல ! ...

2023-06-09 10:34:12
news-image

1978 இல் தங்கம் கடத்தி விமான...

2023-06-06 09:53:32
news-image

மதத்தை மகுடியாக பயன்படுத்தும் அரசியல் :...

2023-06-05 15:32:02
news-image

சேறு குளித்த விக்னேஸ்வரன்

2023-06-05 14:26:13
news-image

போர்க்குற்ற ஆதாரங்களை அழித்தல் அசிரத்தையா, அரசியலா?

2023-06-05 14:34:34
news-image

‘பீச் கிராப்ட்’ கொடையின் பின்னணி

2023-06-05 12:40:30
news-image

வருகிறதா இன்னொரு நெருக்கடி?

2023-06-05 12:25:12
news-image

நிராகரிக்கப்பட்ட அரசியலில் தப்பிப் பிழைத்தல்

2023-06-06 09:56:35
news-image

தனிமனிதன் கூட அடக்குமுறை அமைப்பை எதிர்கொள்ள...

2023-06-05 11:57:39
news-image

ஊடக சுதந்திரங்களை ஒடுக்கும் பாதையில் செல்லக்கூடாது

2023-06-05 09:54:55
news-image

தேசமாக முன்னேற நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி...

2023-06-05 12:07:29
news-image

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு சாவுமணி அடிக்கவே...

2023-06-04 18:17:23