ஓட்டமாவடி விபத்தில் மனைவி பலி; கணவன் படுகாயம்

By Nanthini

06 Nov, 2022 | 02:10 PM
image

மோட்டார் சைக்கிளொன்று படி ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பிரதான வீதியில் நேற்றிரவு (நவ 5) 9.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பகுதியிலுள்ள மகளின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, பாலைநகரிலுள்ள தனது வீட்டுக்கு கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த படி ரக வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மனைவி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் பாலைநகர் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய உசனார் ஆமினா உம்மா என்பவரே உயிரிழந்துள்ளார்.  

உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த கணவர் ஆதம் பாவா உசனார் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் படி ரக வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01
news-image

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில்...

2023-02-05 12:55:22
news-image

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் மகன் தொடர்பு...

2023-02-05 17:40:33