20 ஆம் நூற்றாண்டில் உருவான தன்நிகரில்லா புரட்சியாளரான கியூபா குடியரசின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ரோவின் இழப்பினால் இலங்கை தனது நெருங்கிய நண்பரொருவரை இழந்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தன்நிகரில்லா தலைவரொருவரின் இழப்பினால் கவலையடைந்துள்ள கியூபா மக்களுடன் இலங்கையும்

கைகோர்த்துள்ளதாக கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ரோவின் இழப்பு தொடர்பில் கியூபா ஜனாதிபதி ராவுல் கஸ்ரோவுக்கு  அனுப்பியுள்ள விசேட அனுதாபச் செய்தியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான புறச் சவால்களுக்கு மத்தியிலும் கியூபா மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக தனது வாழ்க்கையையும் தொழிலையும் அர்ப்பணித்த முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ரோ தன்நிகரில்லா,முன்மாதிரியான தலைவராவார்.

அந்த அர்ப்பணிப்பின் ஊடாக விசேடமாக கல்வி, சுகாதாரத் துறைகளில் கியூபா அடைந்த வெற்றியின் மூலம் கியூபாவுக்கென விசேட இடம் உலகில் கிடைத்தது.

ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளும் இலங்கையும் கியூபா பெற்ற அந்த வெற்றிகளால் பயனடைந்து வருவதாகவும் ஜனாதிபதி தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் நீண்டகால நட்புறவு நிலவிவருகிறது. அது அணிசேரா இயக்கத்தின் பெறுமதி மற்றும் மனித அபிவிருத்திக்காக இருநாடுகளும் காட்டும் பொதுவான அர்ப்பணிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கவலைக்குரிய சந்தர்ப்பத்தில் தனிப்பட்டமுறையில் தனதும், இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் ஆழ்ந்த அனுதாபங்களை கியூபா அரசாங்கத்துக்கும்ரூபவ் மக்களுக்கும் கஸ்ரோ குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிவிப்பதாக ஜனாதிபதி தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.