மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் பல வீடுகளை உடைத்து நீண்ட கலமாக திருட்டில் ஈடுபட்டுவந்த சுள்ளான் தீருட்டுக்கும்பல் தலைவர் உட்பட 6 பேரை இன்று ஞாயிறுறுக்கிழமை (நவ, 06) கைது செய்ததுடன் திருடப்பட்ட ரிவி, தண்ணீர் மோட்டர் 8 , சைக்கிள் 2, தங்க ஆபரணங்கள் என்பற்றை மீட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசங்களில் உள்ள வீடுகளை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் தங்க ஆபரணங்கள் திருட்டுப்போயுள்ள சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவந்த கல்குடா பொலிஸார் சம்பவதினமான இன்று காலை வாழைச்சேனை மருதநகரில் வைத்து திருட்டுக் கும்பலின் தலைவர் சுள்ளான் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை சந்திவெளி பிரதேசங்களில் இடம்பெற்ற வீடுகளை உடைத்து திருடிடப்பட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனவும் இவர்கள் கல்குடா, கல்மடு, பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும் இவர்களிடமிருந்து திருடப்பட்ட ரிவி ஒன்று, தண்ணீர் இறைக்கும் மோட்டர் 8 சைக்கிள் 2, மேசைமின்விசிறி ஒன்று , கால் பவுண் சங்கிலி ஒன்று, கால்பவுண் தங்க மோதிரம் இரண்டு, மடிக்கணினி ஒன்று, டிஜிடட்ல் தராசு ஒன்று என்பவற்றை மீட்டுள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM