கடற் பாதுகாப்பு அதிகரிப்பு : சீனப் பிரசன்னம் குறித்து பதிவுகளிலில்லை: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்

Published By: Digital Desk 2

06 Nov, 2022 | 11:57 AM
image

(ஆர்.ராம்)

இலங்கையின் கடற்பாதுகாப்பு முழுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கையை மையப்படுத்தி போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும், வடக்கில் சீனாவின் பிரசன்னம் குறித்த தென்னிந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரின் கரிசனைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையை மையப்படுத்தி போதைப்பொருள் கடத்தலானது அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

pramitha-bandara-650×340.jpg | CIA

வடக்கு,கிழக்கு உட்பட இலங்கையின் பூரண கடற்பரப்பின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக, கரையோரப் பாதுகாப்பு பிரிவினரும், கடற்படை விசேட பிரிவினரும், போதைப்பொருட்களை தடுப்பதற்கான விசேட கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர். 

இதனைவிடவும், சர்வதேச நாடுகளின் ஆழ்கடல் கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளுடன் கூட்டுச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்

இதேவேளை, வடக்கில் சீனத் தரப்பின் பிரசன்னம் தொடர்பில் தென்னிலந்திய கடலோரக்காவல்படையினர் கரிசனை வெளியிட்டிருப்பதாக ‘த ஹிந்து’ வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் குறிப்பிட்ட அவர், “அவ்வாறான எந்த பதிவுகளும் தமக்கு கிடைக்கவில்லை. முறைப்பாடுகளும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் தாக்குதல்...

2024-03-04 00:02:28
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13