(ஆர்.ராம்)
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல் நிலைமைகள் மேலும் மோசமாவைத் தடுப்பதற்காக அவசரமாக மத்திய குழுக் கூட்டத்தினை கூட்டுவதற்கு அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தீர்மானித்துள்ளார்.
மத்திய குழு கூட்டத்தினை அவசரமாக கூட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, தற்காலிக செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்தும் உள்ளார்.
இதுதொடர்பில் மாவை.சோ.சேனாதிராஜா மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் பகிரங்க வெளியில் கருத்துக்களை வெளிப்படுத்துவது பற்றி எனது கவனத்திற்கு பல்வேறு தரப்பினராலும் கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்தவகையில், கட்சியின் விதிகளுக்கு அமைவாகவும், பொதுவிதிகளுக்கு அமைவாகவும், இந்த விடயம் சார்ந்து விரிவான கலந்துரையாடல்களைச் செய்வதற்கு மத்திய குழுக் கூட்டத்தினை கூட்டுமாறு செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.
அத்துடன், உறுப்பினர்கள் பகிரங்க வெளியில் கருத்துக்களை வெளிப்படுத்துவது தொடர்பில், கட்சித்தலைவர் என்ற அடிப்படையில் கரிசனை கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான விடயமாகும்.
இவ்விதமான செயற்பாடுகளால், கட்சியின் பொதுமக்களுக்கான எதிர்காலச் செயற்பாடுகளும், கூட்டுப்பொறுப்பும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் அவதானம் செலுத்தியுள்ளேன் என்றார்.
கட்சிமாநாடு
இதேவேளை, கட்சியின் மாநாடு தொடர்பிலும் மத்திய குழுவில் கலந்துரையாடப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே கட்சியின் மாநாட்டினை டிசம்பர் 18ஆம் திகதி நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கட்சியின் கிளைகள் புனரமைக்கப்பட்டு மீளக் கட்டப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் நாட்களில், வட,கிழக்கு மாகாணத்தில் உள்ள எமது கட்சிக் கிளைகளுக்கு தொடர்ச்சியாக விஜயங்களைச் செய்து நிலைமைகளை அவதானிக்கவுள்ளேன். தொடர்ந்து திட்டமிட்ட திகதியில் மாநாட்டை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதுமட்டுமன்றி குறித்த மாநாட்டிலேயே கட்சியின் பதவி நிலைகளை பொதுக்குழு தீர்மானிக்கவுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM