குதிக்கால் வெடிப்பு...

Published By: Devika

06 Nov, 2022 | 12:33 PM
image

ம் பாதங்களில் இருக்கும் பகுதி­களில் குதிக்கால் பகுதிதான் அதிக அழுத்தத்தை தாங்குகிறது. இதனால்தான் அதிகமாக நடப்பது, நின்றுகொண்டே இருப்பது போன்ற விஷயங்க­ளால் நிறைய பேர் பாத வெடிப்பை சந்திக்­கின்ற­னர். இந்த குதிக்கால் வெடிப்பு எந்த கார­ணத்­தி­னால் உண்டாகிறது. மேலும் அதற்கு எப்படி­யெல்லாம் சிகிச்சை செய்யலாம் என அறிந்துகொள்வோம். 

இதனால் பாதங்களில் பிளவுகள் உண்டாகி வலி ஏற்படுகிறது. இந்த குதிக்கால் வெடிப்பை நாம் சில இயற்கை முறைப்படி சரி செய்ய முடியும். 

இயற்கையாகவே பாதங்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்போது குதிக்கால் வெடிப்பு மறை­கிறது. பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை குதிக்கால் வெடிப்புதான். குதிக்கால் வெடிப்பு காலின் அழகைக் கெடுப்பதோடு பல சமயங்களில் நமக்கு வலியையும் ஏற்படுத்துகிறது. இது அப்படியே வளர்ச்சியடைந்து செல்லுலாய்டிஸை உண்டாக்கு­கிறது. குதிக்காலிலுள்ள சருமம் வறண்டு போகும்போது அதில் வெடிப்புகள் உருவாகின்­றன. அதே மாதிரி நாம் நடக்­கும்­போது குதிக்கால் பகுதி அதிக அழுத்தத்தை சந்திக்கிறது. இதனால் அதிக அழுத்தம் உண்டாகி அந்த சருமம் தடிமனாகி குதிக்கால் வெடிப்பை ஏற்படுத்துகிறது. 

இந்தப் பிளவுகள் ஆழமாக போகும்போது தான் நமக்கு வலியை ஏற்படுத்துகிறது. குதிக்கால் வெடிப்பை கால்சஸ் என்ற பெயரில் அழைக்­கின்ற­னர். குதிக்கால் பகுதியை சுற்றியுள்ள சரு­மம் கடினமாகி வறண்டு போய் வெடிப்பானது உண்டா­கிறது. நீங்கள் தொடர்ச்சியாக நடந்து குதிக்காலுக்கு அழுத்தத்தை கொடுக்கும்போது நிலைமை இன்­னும் மோசமாகலாம். 

நீண்ட நேரம் நிற்பது, வெறுங்காலில் நீண்ட தூரம் நடப்பது, சூடான நீரில் குளிப்பது, காலநிலை மாற்றம், கடினமான சோப்புகளால் தோல் வறண்டு போதல், குளிர்ச்சியான காலநிலையால் வறண்ட சருமம் தோன்றுதல் இவையே பாத வெடிப்புகள் உருவாக காரணமாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்