வாகனங்களை இடதுபக்கமாக முந்திச்செல்லும்  குற்றத்துக்கான அபராதத்தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அறவிட முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனையை நிதியமைச்சர்  கைவிடுவதற்கு இணக்கம்  தெரிவித்துள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் டில்ருக் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிக வீதிகளில் வாகன நெரிசல்கள் ஏற்படுவதனால் இடது பக்கமாக முந்தி செல்வதற்கு 25 ஆயிரம் அபராதம் விதிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.

எனினும் ஏனைய 6 குற்றங்களுக்கும் 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பதற்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம் என்றார்.