சர்­வ­தேச சந்­தையில் எரி­பொ­ருளின் விலை குறைந்­துள்ள போதும் இலங்­கையில் எரி­பொ­ருட்­களின் விலைகள் குறைக்­கப்­ப­டாது.

எனினும் சர்­வ­தேச சந்­தையின் மாற்­றத்­துக்கு ஏற்ப எரி­பொ­ருட்­களின் விலை­களில் மாற்­றங்­களை கொண்டு வரும் வகையில் சூத்­திரம் ஒன்று விரைவில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த புதிய சூத்­திரம், எதிர்­வரும் ஜன­வரி 6ஆம் திக­தி­யன்று அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது என்று பெற்­றோ­லி­யத்­துறை அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்­துள்ளார்.

2014ஆம் ஆண்­டுக்கு பின்னர் சர்­வ­தேச சந்­தையில் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 85 டொலர்­களில் இருந்து 37 டொலர்­க­ளாக குறைந்­துள்­ளது.

எனினும் ஜன­வரி 21ஆம் திக­தி­யன்று இந்த மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி ஏற்­பட்­ட­மைக்­கான காரணம் என்ன என்­பதை தெரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை என்று அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­த­ நி­லையில் ஜனா­தி­பதி தேர்­தலின் போது உறு­தி­ய­ளிக்­கப்­பட்­ட­படி எரி­பொ­ருட்­க­ளுக்­கான விலை சூத்­திரம் சமர்ப்­பிக்­கப்­படும் என்று அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

இதன்­படி சர்­வ­தேச சந்­தையின் நிலை­வ­ரப்­படி எரிபொருட்களின் விலைகளில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றங்கள் மேற் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.