(எம்.எம்.சில்வெஸ்டர்)
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான வாகனங்களின் வரிசை திங்கட்கிழமைக்குள் குறைந்துவிடும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் விலை குறையும் என எண்ணி கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எம்மிடம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை.
இதன் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
கியூ ஆர் மூலம் எரிபொருள் நிரப்பப்படுவதால், நாளாந்தம் சுமார் 4,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை பெறுவதற்கு முன்னர், வங்கி ஊடாக கட்டணத்தை செலுத்தப்பட வேண்டியுள்ளதால், அதுவும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் வரைக்குமான போதுமானளவு டீசல் இருப்பதாகவும், சுமார் 20 நாட்களுக்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதாகவும், தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பலிலுள்ள 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் அடுத்த வாரத்திற்குள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM