வவுனியா வடக்கில் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்தவர்களுக்கு எதிராக வனவளத்திணைக்களம் முறைப்பாடு : இருவர் கைது

Published By: Digital Desk 3

05 Nov, 2022 | 12:51 PM
image

(K.B.சதீஸ்)

வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடும்ப வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்த குடும்பஸ்தர்களுக்கு எதிராக வனவளத் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை 1977 - 1980 வரையான காலப்பகுதியில் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய காணிகளும் வழங்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்று யுத்தம் முடிவடைந்த பின் 84 வரையிலான குடும்பங்கள் அப் பகுதியில் மீள்குடியேறினர். 

அம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமையால் மீளவும் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் 15 குடும்பங்கள் வரையில் தற்போது அங்கு வசித்து வருகின்றனர். அம் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளுடன் இணைந்த காணித் துண்டங்களில் தோட்ட செய்கை மற்றும் நெற் செய்கை என்பவற்றை மேற்கொள்வதற்காக காணிகளை உழுது பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் அது வனவளத்திணைக்களத்திற்குரிய காணி எனத் தெரிவித்து அவர்கள் பயிர்ச் செய்கை நடவடிக்கையில் ஈடுபட தடை விதித்துள்ளதுடன், உழுது பயிற்செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (04) பிணையில் விடுவிடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமது குடியிருப்பு காணிகளில் ஒரு வயிற்றுக் கஞ்சிக்கு கூட பயிர் செய்ய வனவளத் திணைக்களம் அனுமதிக்கவில்லை எனவும் இது குறித்து அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மௌனம் காத்து வருவதாகவும் மீள்குடியேறிய மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2025-01-22 15:43:51
news-image

திருமண வயது எல்லையை பொது வயது...

2025-01-22 15:43:57
news-image

மட்டக்களப்பில் ஐஸ், கேரள கஞ்சா, கசிப்புடன்...

2025-01-22 15:31:29
news-image

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச்...

2025-01-22 15:31:13
news-image

ஹட்டனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

2025-01-22 15:03:10
news-image

கிளிநொச்சியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளம்;...

2025-01-22 15:09:36
news-image

சிங்கக் குட்டிகளுக்கு பெயரிட பொதுமக்களுக்கு அரிய...

2025-01-22 14:58:50
news-image

வாய்க்காலில் வீழ்ந்து கெப் வாகனம் விபத்து

2025-01-22 14:52:38
news-image

2014 முதல் நஷ்டத்தில் இயங்கிய ஶ்ரீலங்கன்...

2025-01-22 14:32:57
news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-01-22 14:28:32
news-image

உடன்பிறந்த அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற...

2025-01-22 14:10:47
news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52