மன்னாரில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைகளை நாடும் ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Published By: Nanthini

05 Nov, 2022 | 01:57 PM
image

(மன்னார் நிருபர்)

ன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் உருவாகியுள்ள போதைப்பொருள் பாவனையால் ஏற்படக்கூடிய தீமையான விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள், நிகழ்ச்சிகள் என்பன சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பல பாடசாலைகளில் நிறைவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதாரத் துறையினரும் கல்வித் துறையினரும் இணைந்து பாடசாலை மாணவர்கள் மத்தியில் உருவாக்கியுள்ள போதைப்பொருள் பாவனையால் ஏற்படக்கூடிய தீமையான விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள பாடசாலைகளில் நடாத்தப்பட்டு வந்தன.

குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை பாடசாலை சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் சிகிச்சைகளை நாடிவரும் ஆரோக்கியமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02