யாழில் கடந்த 11 மாதங்களில் டெங்கினால் 8 பேர் உயிரிழப்பு

Published By: Nanthini

05 Nov, 2022 | 12:19 PM
image

யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் 2774 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும், 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ 5) ஊடகங்களை சந்தித்தபோது இத்தரவினை வெளிப்படுத்தி அவர் மேலும் கூறுகையில், 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. 

இந்த மாவட்டத்தில் இன்று நவம்பர் 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 2774 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அத்துடன் இந்த வருடத்தில் 8 டெங்கு நோய் இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

இவ்வருட ஆரம்பத்தில் இருந்து மாத ரீதியாக பார்க்கிறபோது, ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக டெங்கு பரவல் அதிகரித்து, மே, ஜூன் மாதமளவில் ஒரு அதிகரித்த பரம்பல் காணப்பட்டது. 

பின்பு நோய்ப்பரவலில் குறைவான நிலை காணப்பட்டு, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மீண்டும் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துச் செல்வதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:29:15
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:29:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26
news-image

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன...

2025-04-28 09:05:21
news-image

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமான...

2025-04-28 08:52:58
news-image

இன்றைய வானிலை

2025-04-28 06:04:54