INSEE சீமெந்து நிறுவனம் IUCN உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்து

Published By: Nanthini

05 Nov, 2022 | 10:23 AM
image

லங்கையின் மிகப்பெரிய மற்றும் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து நிறுவனம், அண்மையில் இயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்துடன் (International Union for Conservation of Nature and Natural Resources - IUCN) புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. 

INSEEஇன் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பல்லுயிர்த் திட்டங்களை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்வதற்கான நீண்டகால  கூட்டாண்மையின் நீட்டிப்பாக இது அமைந்துள்ளது. 

INSEE சீமெந்து நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நந்தன எக்கநாயக்க மற்றும் IUCNஇன் பிராந்திய இலங்கைக்கான அலுவலகத்தின் பிராந்திய குழும முகாமைத்துவ இணைப்பாளரும், இலங்கை அலுவலகத்தின் பொறுப்பதிகாரியுமான அன்ஷமான்சைகியா ஆகியோரால் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

“"இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் நுழைவதன் மூலம் இலங்கையில் பல்லுயிர் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்புக்கான எங்களின் வலுவான அர்ப்பணிப்பை INSEE சீமெந்து நிறுவனம் தொடர்ந்து வெளிக்காண்பிக்கிறது" என்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்த INSEE சீமெந்து நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகளுக்கான முகாமையாளரான றொஹான் லக்மால் அவர்கள் கருத்து தெரிவித்தார். 

“INSEEஇன் நிலைபேற்றியல் இலட்சியம் 2030இன் அடிப்படைத் தூண்களில் பல்லுயிர் பெருக்கமும் ஒன்றாகும். IUCNஉடனான எங்கள் கூட்டாண்மையானது இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தில் ஏற்படும் பொதுவான சரிவு மற்றும் நமது இயற்கை வாழ்விடங்களை பேணிப் பாதுகாக்கவேண்டியதில் நமது பங்கினை ஆற்ற வேண்டியதன் அவசர நிலைமை குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேவேளை, INSEE சீமெந்து நிறுவனத்தில் நமது சொந்த இலட்சிய நிலைபேற்றியல் இலக்குகளை அடையவும் உதவுகிறது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

அகழ்விட புனர்வாழ்வுக்கான IUCNஉடனான கூட்டாண்மை 2007ஆம் ஆண்டிலிருந்து தொடர்வதுடன், திருப்திகரமான மற்றும் அளவிடக்கூடிய பெறுபேறுகளுடன் ஒவ்வொரு மூன்று வருடங்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்தும் புதுப்பிக்கப்பட்டது. 

கைச்சாத்திடப்பட்டதை தொடர்ந்து INSEE மற்றும் IUCN இந்த உடன்படிக்கையை 2022 முதல் 2025 வரை நீட்டித்துள்ளன. புதுப்பிக்கப்பட்ட செயல்திட்டங்களில் கள ஆய்வுகள், மறுசீரமைக்கப்பட்ட அகழ்விட தளங்களுக்கான கண்காணிப்பு மற்றும் பரிந்துரைகள், வனவிலங்கு மீட்பு, விடுவிக்கும் நடவடிக்கைகள், கொக்கலை மற்றும் அருவாக்காடு சதுப்பு நில மறுசீரமைப்புத் தளங்கள், உனவட்டுனவில் உள்ள செயற்கை பவளப்பாறைகளின் அடிப்படை மதிப்பீடுகள் ஆகியவை அடங்கும். 

IUCN மூலம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் ஏனைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் INSEE சீமெந்து நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளையும் இந்த உடன்படிக்கை வழங்குகிறது.

இலங்கையின் ஒரே ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்பணியகம், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை மற்றும் இலங்கையின் மாகாண சுற்றுச்சூழல் சட்டம், இலங்கையின் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பு கட்டளை மற்றும் ராம்சார் உடன்படிக்கை வேலைத்திட்டம் மற்ற உள்ளூர் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் செயற்பாட்டு உரிமங்களுக்கு இணங்க வருடாந்தம் சராசரியாக 25 ஏக்கர் வனப்பகுதியை சுண்ணாம்பு அகழ்வுக்காக பயன்படுத்துகிறது. 

இந்த விரிவான அனுமதி அங்கீகார செயல்முறைக்கப்பால் சுற்றுச்சூழல் மீதான பாதிப்பை மதிப்பிடுவதற்கும், விசேட பல்லுயிர் செயற்பாட்டுத் திட்டமிடலை நடத்துவதற்கும்,  சுற்றியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைப்பதற்கு விரிவான பல்லுயிர் முகாமைத்துவத் திட்டத்தை பின்பற்றுவதற்கும் IUCNஉடன் INSEE சீமெந்து கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த செயல்திட்டத்தில் 2500 மெதுவாக நகரும் மற்றும் சிறிய விலங்குகளை உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு சராசரியாக இடமாற்றம் செய்யும் விலங்குமீட்பு மற்றும் விடுவிக்கும் திட்டமும் அடங்கும். 

இன்று வரை அருவாக்காடு அகழ்விடத்தில் 137 ஹெக்டேயர்களுக்கு மேல் INSEE சீமெந்து வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது.

கடந்த தசாப்தத்தில், INSEE சீமெந்து புத்தளம் மற்றும் காலியில் உள்ள தனது உற்பத்தி ஆலைகளை அண்மித்த கரையோரப் பகுதிகளில் பல சதுப்பு நிலக் காடுகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. 

அத்துடன், இன்று வரை 7 ஹெக்டேயர் பரப்பளவை மீள்காடு வளர்ப்பின் மூலம் மீட்டெடுத்து, 2023ஆம் ஆண்டுக்குள் 66 ஹெக்டேயர் சதுப்பு நிலக் காடுகளை மீட்டெடுப்பதற்கான நிலைபேற்றியல் இலட்சியத்துடன் செயற்பட்டு வருகின்றது. 

இந்நிறுவனம் IUCN இலங்கை, தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகவராண்மை ஆகியவற்றின் பவளப்பாறை வல்லுநர்களுடன் இணைந்து உனவட்டுன கடற்கரையில் சீரழிந்த கடல் உயிரின வாழ்விடங்கள் மற்றும் பவளப்பாறைகளை பேணிப் பாதுகாக்கிறது.

இந்த புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் மூலம் INSEE சீமெந்து நிறுவனம், INSEE Sustainability Ambition 2030 என்ற நிலைபேற்றியல் இலட்சியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள செயல்திட்டங்களை மதிப்பாய்வு செய்யவும், மேலும் விரிவான பல்லுயிர் சார் மூலோபாயத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. 

அத்துடன் பல்லுயிர் பாதுகாப்பினை மேலும் ஊக்குவிக்கும் புதிய முயற்சிகளை இனங்கண்டு, முன்னெடுக்கும் அதேவேளை, INSEE நிறுவனம் தான் செயற்படுகின்ற சமூகங்களுக்கு மத்தியில் நிலைபேற்றியல் கொண்ட வாழ்வாதாரங்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57