இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பது தாமதமாகின்றது என வெளியாகும் செய்திகள் தவறானவை என நிதி இராஜாங்க அமைச்சர் செசான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைப்பது தாமதமாகாது என அவர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
டிசம்பரின் பின்னர் மார்ச் மாதத்திலேயே சர்வதேச நாணயநிதியத்தின் கூட்டம் இடம்பெறும் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன இது பிழையான விடயம் சர்வதேச நாணயநிதியத்தின் கூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுவது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது நாங்கள் சமமான ஒப்பிடக்கூடிய வெளிப்படையான விதத்தில் செயற்படுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் உதவி தொடர்பான பேச்சுவார்த்தைகள் எப்போதும் குழப்பமானவை என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சீனா இந்தியா ஜப்பான் உட்பட எங்களிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருக்கும ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்காக நன்றி தெரிவிக்கின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM