போராட்டத்தால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியாது : தேர்தலே இடம்பெற வேண்டும் என்கிறார் வெல்கம

Published By: Digital Desk 5

04 Nov, 2022 | 04:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சாதாரண மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாததால் நவம்பர் 2 எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த போராட்டம் தோல்வியடைந்தது.

போராட்டத்தினால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியாது, தேர்தல் ஒன்று இடம்பெற்றால் மாத்திரமே ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

புதிய லங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும்,தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச அங்கிகாரம் உள்ளது.தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடியின் போது அரசியல் கொள்கைக்கு முன்னுரிமை வழங்க முடியாது.பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்.அதற்காக அரசாங்கம் பக்கம் செல்லமாட்டேன்.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நாடுகள் அரசியல் கட்சி என்ற ரீதியில் வேறுப்பட்டு செயற்படாமல் ஒன்றிணைந்து செயற்பட்டு நிலைமையை வெற்றிக்கொண்டுள்ளன.அதனை நாமும் ஒரு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.தேர்தல் காலத்தில் அவரவர் தமது அரசியல் கொள்கைக்கு அமைய செயற்பட்டு கொள்ளலாம்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த 2ஆம் திகதி (புதன்கிழமை) கொழும்பில் நடத்திய போராட்டம் தோல்வியடைந்துள்ளது.அரசியல் கட்சிகளுக்கு ஆதரவானவர்களே போராட்டங்களில் கலந்துக் கொண்டார்கள்.அரசியல் கொள்கையற்ற சாதாரன மக்கள் போராட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை.

ஜூன் மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டம் உண்மையானது.பலவீனமான அரச தலைவரை வீட்டுக்கு அனுப்ப நாட்டு மக்கள் ஒன்றிணைந்து அதில் வெற்றிப்பெற்றார்கள்.தற்போது போராட்டத்தில் ஈடுப்படுபவர்களிடம் உண்மை நோக்கம் கிடையாது,அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக போராட்டம் இடம்பெறுகிறது.

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.அரசியல் ஸ்திரத்தன்மை பேணப்பட்டால் தான் சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும்.போராட்டத்தினால் இனி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியாது.தேர்தல் ஒன்று இடம்பெற்றால் நிச்சயம் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2025-03-18 12:05:27
news-image

கடையின் சுவரை உடைத்து சேதப்படுத்திய காட்டு...

2025-03-18 11:58:03
news-image

மீன்பிடி அமைச்சால் கொண்டுவரவிருக்கும் கடற்றொழில் சட்டம்...

2025-03-18 11:57:48
news-image

நிலாவெளியில் வாகன விபத்து ; முச்சக்கரவண்டி...

2025-03-18 11:57:09
news-image

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகள்...

2025-03-18 11:43:21
news-image

பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூல்கள்...

2025-03-18 11:56:33
news-image

“கணேமுல்ல சஞ்சீவ“ படுகொலை ; கைது...

2025-03-18 11:24:42
news-image

ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் பால்மாவின்...

2025-03-18 11:20:29
news-image

ருவன்வெல்ல பகுதியில் கார் விபத்து ;...

2025-03-18 10:58:15
news-image

ஹட்டனில் மின்னல் தாக்கி மரம் முறிந்து...

2025-03-18 10:48:24
news-image

குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதி கட்டுநாயக்கவில்...

2025-03-18 10:25:30
news-image

இலங்கையின் அபூர்வமான ‘யூனிகொர்ன்’ யானை சுட்டுக்...

2025-03-18 10:51:54