மகளிர் இரு­ப­துக்கு 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்­றைய போட்­டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்த்­தா­ட­வுள்­ளது.

இலங்கை, இந்­தியா ,பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் ,நேபாளம் , தாய்­லாந்து ஆகிய 6 நாடுகள் பங்­கு­கொள்ளும் மக­ளிர்க்­கான இரு­ப­துக்கு 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தாய்­லாந்தின் பாங்­கொக்கில் அமைந்­துள்ள ட்ரெட்தாய் விளை­யாட்­ட­ரங்கில் நேற்று ஆரம்­ப­மா­னது. 

லீக் சுற்றில் ஆறு அணி­களும் தலா ஒரு முறை ஏனைய அணி­க­ளுடன் விளை­யாட வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முத­லிரு இடங்­களைப் பெறும் இரு அணி­களும் 4 ஆம் திக­தி­யன்று நடை­பெறும் இறுதிப் போட்­டியில் விளை­யாடத் தகுதி பெறும். 

இம்­முறை இலங்கை மகளிர் அணிக்கு ஹசினி பெரேரா தலைமை வகிக்­கிறார். காயம் கார­ண­மாக இங்­கி­லாந்து அணிக்கு எதி­ரான போட்­டி­களில் பங்­கேற்­காத உதே­ஷிகா பிர­போ­தினி, யசோதா மென்டிஸ், ஏஷானி லோக­சூ­ரிய ஆகிய மூவரும் ஆசிய கிண்ண தொடரில் பங்­கேற்க மீள அழைக்­கப்­பட்­டுள்­ளமை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு பல­மாகும். 

இலங்கை தனது முதல் போட்­டியில் பாகிஸ்­தா­னையும் (27), இரண்­டா­வது போட்­டியில் நேபா­ளையும் (28) மூன்­றா­வது போட்­டியில் தாய்­லாந்­தையும் (30) எதிர்த்­தா­ட­வுள்­ளது. மேலும் பலம்­பொ­ருந்­திய இந்­திய அணி­யுடன் அடுத்த மாதம் முதலாம் திக­தி­யன்றும் லீக் சுற்றின் கடைசி போட்­டியில் பங்­க­ளா­தேஸுடன் 3 ஆம் திக­தி­யன்றும் விளை­யா­ட­வுள்­ளது. 

இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் விபரம்

ஹசினி பெரேரா ( அணித்­த­லைவி),  பிர­சா­தினி வீரக்­கொடி,யசோதா மென்டிஸ், உதே­ஷிகா பிர­போ­தினி, ஏஷானி லோக்­க­சூ­ரிய, சமரி அத்­த­பத்து, டினாலி மனோதார, ஸ்ரீபாலி வீரக்கொடி, நிலக் ஷி சில்வா, உதேஷிகா பிரபோதினி, சுகந்திகா குமாரி, இனோக்கா ரணவீர, ஓஷதி ரணதுங்க, அமா காஞ்சனா, ஹன்சிமா கருணாரட்ன, நிபுனி ஹன்சிகா