மிக ஆபத்தான செடியை வளர்க்கும் நபர் ! அப்படி என்ன ஆபத்து இருக்கிறது இந்த செடியில் ?

Published By: Digital Desk 3

04 Nov, 2022 | 12:36 PM
image

உலகின் மிக ஆபத்தான செடி ஒன்றினை பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு நபர் தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.

இந்த செடியிலும், அதன் இலைகளிலும் இருக்கும் சிறிய முட்கள் மிக ஆபத்தானவையாக அறியப்படுகிறது.

கிட்டத்தட்ட ஒரு பாம்பு கடித்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு வலியை இந்த முட்கள் கொடுக்கும் என தாவர விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவில் லண்டனைச் சேர்ந்த டேனியல் எமிலின் (44) என்பவர் உலகிலேயே மிக ஆபத்தான செடியாக அறியப்படும் 'ஜிம்பி ஜிம்பி' (Gympy Gympy) என்ற செடியைதான் அவர் வளர்த்து வருகிறார். 

யாருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதற்கென பிரத்தியேகமாக இரும்புக் கூண்டை செய்து அதற்குள் அந்தச் செடியை வைத்து அந்த நபர் வளர்த்து வருகிறார்.

மேலும், அந்தக் கூண்டுக்கு வெளியே 'டேஞ்சர்' குறியீடையும் அவர் வைத்துள்ளார். 

இந்த செடியின் மீதும், அதன் இலைகள் மீதும் மிக மிகச் சிறிய முட்கள் இருக்கும்.  முள் என்றால் சாதாரணமாக இருக்கும் முள் என நினைத்துவிட வேண்டாம். பாம்பு கடித்தால் எப்படி இருக்குமோ, அந்த அளவுக்கு வலியை இந்த முள் தரக்கூடியது. 

மேலும், பல மாதங்களுக்கு இந்த முள் குத்திய தடிப்புகளும், வலியும் அப்படியே இருக்கும். நாளுக்கு நாள் இந்த வலி அதிகரித்துக் கொண்டே இருக்குமே தவிர குறையாது.

மேலும், இந்த முட்களில் உள்ள விஷமானது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியவை. இதனால் இந்த முள் நன்றாக குத்திவிட்டால் மனிதர்களுக்கு தற்கொலை எண்ணம் வந்துவிடும். 

பலர் தற்கொலையும் செய்திருக்கிறார்கள். 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை இந்த செடியின் முட்கள் குத்தினால் மரணம் வரை கூட சென்றுவிடும்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, 

"செடிகளை வளர்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சாதாரண செடிகளை வளர்த்து வளர்த்து 'போர்' அடித்துவிட்டது.

அதனால், எந்த செடி மிக ஆபத்தான செடி என இணையத்தில் தேடி பார்த்த போது இந்தச் செடிதான் வந்தது. இது ஆஸ்திரேலியாவின் காட்டுப்பகுதிகளில் மட்டுமே இருக்கக்கூடியவை.

ஆனால், சில ஆன்லைன்களில் இந்த செடியின் விதைகள் இருந்தன. எனவே ஆன்லைனில் ஆர்டர் செய்து இந்தச் செடிகளின் விதைகளை வாங்கினேன் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்