கூகுள், பேஸ்புக், அமேஸானின் மொத்தப் பெறுமதியைவிட அப்பிள் நிறுவன பெறுமதி அதிகரிப்பு

Published By: Sethu

04 Nov, 2022 | 11:43 AM
image

கூகுள், பேஸ்புக், அமேஸான் நிறுவனங்களின் கூட்டு சந்தைப் பெறுமதியைவிட அப்பிள் நிறுவனத்தின் சந்தைப் பெறுமதி அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை நிறைவடைந்த பங்குச்சந்தை விற்பனைகளின் பின்னர் அப்;பிள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2.307 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது என யாஹூ நிதியியல் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்டின் மொத்த சந்தைப்பெறுமதி 1.126 ட்ரில்லியன் டொலர்களாக இருந்தது. அமோஸானின் சந்தைப் பெறுமதி 939.78 பில்லியன் டொலர்களாகவும் பேஸ்புக்கின் தாய் நிறுவுனமான மேட்டாவின் சந்தைப் பெறுமதி 240.07 பில்லியன் டொலர்களாகவும் இருந்தது. 

அதாவது இம்மூன்று நிறுவனங்களினதும் மொத்த சந்தைப் பெறுமதி 2.306 பில்லியன் டொலர்களாகும். 

நான்காவது காலண்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவுள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்ததையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அந்நிறுவனத்தின் பங்குகளின் பெறுமதி 8 சதவீதத்தினால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக மீனவர்கள் கைது: இந்திய வெளியுறவு...

2024-06-24 14:49:50
news-image

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு...

2024-06-24 14:40:26
news-image

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் மோடி அரசியல்...

2024-06-24 12:11:23
news-image

அடுத்தது லெபனான் யுத்தமா? ஹெஸ்புல்லா அமைப்பை...

2024-06-24 10:58:40
news-image

டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ தேவாலயங்கள்யூதவழிபாட்டு தலங்கள்...

2024-06-24 06:41:54
news-image

அடிலெய்டில் வணிக வளாகத்தில் பதற்றம் -...

2024-06-23 13:14:36
news-image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்; சென்னையில் பதுங்கி இருந்த...

2024-06-23 12:33:26
news-image

தாய்வானின் சுதந்திரத்துக்காக முயற்சி செய்பவர்களுக்கு மரண...

2024-06-23 12:03:55
news-image

காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டிப்போட்டு...

2024-06-23 10:11:14
news-image

முதல் தாக்குதல் காரணமாக அச்சமடைந்து கதறியவர்களை...

2024-06-22 12:08:53
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 3...

2024-06-22 10:40:26
news-image

கடும் வெப்பத்தால் 4 பால்கன் நாடுகளில்...

2024-06-22 10:55:22