தென் கொரியாவின் தி கூக்ஜே டெய்லி நியூஸ் மற்றும் ஆசியா ஊடகவியலாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 'உலக எக்ஸ்போ 2030 பூசான்' மாநாடு எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
'ஆசியாவின் மாபெரும் மாற்றம்' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆசிய நாடுகளில் ஊடகங்கள் மூலம் பூசான் பெருநகரத்தை மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எகிப்து, இந்தோனேசியா, கம்போடியா, வியட்நாம், பாகிஸ்தான், ஈரான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள் 'உலக எக்ஸ்போ 2030 பூசான்' நிமித்தம் கொரியாவுக்கு வருகை தரவுள்ளனர்.
இவர்கள் 'உலக எக்ஸ்போ 2030 பூசான்' மாநாட்டின்போது வடக்கு துறைமுக பகுதியை ஆராய்வார்கள். மேலும், கொரியாவில் உள்ள சர்வதேச மற்றும் அரசு நிறுவனங்களையும் பார்வையிடுவார்கள்.
மிகப் பெரிய துறைமுகத்தைக் கொண்ட பெருநகர் பூசான்
பூசானில் உலக பொருட்காட்சி 2030ஐ நடத்துவதற்கான அங்கீகார கடிதத்தை ஜூன் 2021இல் கொரிய குடியரசு சமர்ப்பித்திருந்தது. இதன் பிரகாரமே இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
பூசான், கொரியாவின் இரண்டாவது பெரிய நகரம். அத்துடன் மிகப்பெரிய துறைமுக நகரமாகவும் அறியப்படுகிறது.
பூசான் நகரின் அறிவிப்பின்படி, முழு நகரமும் 'உலக எக்ஸ்போ 2030'ஐ நடத்துவதற்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
நன்கு அபிவிருத்தி அடைந்த நகரம்
அரை நூற்றாண்டுக்குள் கொரியாவின் பொருளாதார உதவியை பெற்று, கொரியாவின் வெற்றிப் பாதையில் பூசான் நகரம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதேவேளை நான்காவது தொழில்துறை புரட்சிக்கு மத்தியில் பூசான் நகரம் உருமாற்ற செயல்முறையில் முன்னணி வகிக்கிறது.
2019 ஜூலை 23ஆம் திகதி பூசான் புத்தாக்கமான தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வதற்கான தொடர்புடைய வணிகங்களை வளர்ப்பதற்கும் பிளாக்செயின் தொழில்நுட்பங்களுக்கான ஒழுங்குமுறை இல்லாத மண்டலமாக நியமிக்கப்பட்டது.
கொரியாவின் எதிர்கால தொழில்களுக்கான மையமான பூசான் எகோ டெல்டா ஸ்மார்ட் சிட்டி, வட கிழக்கு ஆசியாவின் தளவாட மையமாகவும் மாறிவருகிறது.
இந்த செழிப்பான நகரம் இப்போது கடல் அறிவியல் மையமாகவும், கொரியா கடல்சார் நிறுவனம் மற்றும் கொரியா இன்ஸ்டிட்யூட் ஒஃப் ஓஷன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி போன்ற தொடர்புடைய நிறுவனங்களின் இல்லமாகவும் செயல்படுகிறது.
சிறந்த அமைவிடம்
பூசான் ஒரு போக்குவரத்து மற்றும் தளவாட மையமாகும். மேலும், யூரேசிய கண்டத்திலிருந்து ஆசிய/-பசுபிக் வரை இணைக்கும் பாதையாகும்.
இது விமான நிலையங்கள், அதிவேக புகையிரதம் மற்றும் மேல்முனைகள் கொண்ட துறைமுகங்கள் போன்ற நன்கு பொருத்தப்பட்ட உள்கட்டமைப்புகளுக்கு எளிதான அணுகலை வழங்குகிறது.
ஆசிய/பசுபிக்கின் மையமாக, உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து வருகைதரும் 40 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பூசானுக்கு வருகை தருகின்றனர்.
பூசான் ஒரு செழிப்பான பெருநகரமாக இருக்கும் அதேவேளை, பூசானில் உள்ள ஏழு கடற்கரைகள், ஆறுகள் மற்றும் மலைகள் உட்பட கடலுக்கு இடையே உள்ள வசீகரிக்கும் இயற்கை சூழலையும் இது உள்ளடக்கியுள்ளது.
இந்த கலகலப்பான நகரம் வருடாந்திர பூசான் சர்வதேச திரைப்பட விழா, பூசான் ஒன் ஆசியா விழா மற்றும் ஜி-ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் கலாசாரத்தை மேம்படுத்துவதில் முன்நிற்கிறது.
நகரின் சிறந்த அனுபவம்
2002இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2005இல் பன்னாட்டு உச்சி மாநாடு போன்ற பெரியளவிலான சர்வதேச நிகழ்வுகளை நடத்தியதில் பூசான் நகராட்சிக்கு விரிவான அனுபவம் உள்ளது.
சர்வதேச கண்காட்சிகளை நடத்துவதில் சிறந்த நிபுணத்துவத்தையும் கொண்டுள்ளது.
இந்த உலகளாவிய மெகா சிட்டியானது 'உலக எக்ஸ்போ 2030' மாநாட்டை நடத்துவதற்கான முழுத் திறனும் விருப்பும் கொண்டுள்ளது.
'உலகத்தை மாற்றுதல், சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணித்தல்'
தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியானது சிறந்த மற்றும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியாக பின்பற்றப்பட்டாலும், மனிதகுலம் முன் எப்போதும் இல்லாத காலநிலை நெருக்கடி, தொற்றுநோய் மற்றும் டிஜிட்டல் பிளவு போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்கிறது.
எனவே, இதுபோன்ற சிக்கல்களை நிவர்த்தி செய்து, உயர் இலக்கினை அடைவதற்கு 'பூசான் உலக எக்ஸ்போ 2030' மாநாட்டை 'எங்கள் உலகத்தை மாற்றுதல், சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணித்தல்' என்ற முக்கிய கருப்பொருளுடன் நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இக்கருப்பொருளின் கீழ், பின்வரும் மூன்று உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள துணை கருப்பொருள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
(1) காலநிலை மாற்றம்
(2) டிஜிட்டல் மாற்றத்தின் தீமைகள்
(3) நாடுகளுக்குள் சமத்துவமின்மை.
இந்த ஒவ்வொரு துணை கருப்பொருளும் மக்கள், உலகம், அபிவிருத்தி ஆகிய மூன்று தூண்களை கொண்டுள்ளது. -
'உலக எக்ஸ்போ 2030' மாநாட்டை நடத்தும் குழு
பூசான் மக்களுடன் கொரியர்களும் உலக எக்ஸ்போ 2030 மாநாட்டை பூசானில் நடத்த வேண்டும் என்ற வலுவான விருப்பத்தை பகிர்ந்துகொள்கின்றனர்.
மத்திய, உள்ளாட்சி நிர்வாக மற்றும் சட்டமன்றக் கிளைகள், தனியார் மற்றும் பொதுத் துறைகள் ஒரே குழுவாக செயற்பட்டு முழு மனதுடன் இம்மாநாட்டை நடத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
மத்திய அரசு முழுவதுமான ஆதரவை வழங்குவதற்காக பிரதமர் தலைமையிலான அரசு ஆதரவுக்குழு கடந்த 2021 நவம்பரில் தொடங்கப்பட்டது.
அதேவேளை உலகின் முன்னணி வணிக நிறுவனங்கள் பூசானில் மாநாட்டை நடத்த பங்கேற்கின்றன.
சம்சுங், ஹூண்டாய் மற்றும் எஸ்கே உள்ளிட்ட கொரியாவின் முதல் பத்து வணிகங்களின் பிரதிநிதிகள் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். அத்தோடு பூசான் குடிமக்களின் வலுவான ஆதரவும் இன்றியமையாதது.
உலக எக்ஸ்போ 2030 பூசான், கொரியா
'உலக எக்ஸ்போ 2030 பூசான்' ஓர் உலகளாவிய விழாவாக இருக்கும். இதன் கதவுகள் அனைவருக்கானதாகவும் திறந்திருக்கும்.
நாம் தொடங்கும் பயணம் தற்போதைய நெருக்கடிக்கப்பால் மனித குலத்துக்கும் முழு உலகத்துக்கும் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்க அழைத்துச் செல்லும்.
கொரிய மாற்றத்தின் மையத்தில் இருக்கும் பூசான் நகர், பூமிக்கும் மனித குலத்துக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கிய புதிய போக்கை அமைக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM