வட்ஸ் - அப்பில் புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ஜுக்கர்பெர்க்

Published By: Digital Desk 3

04 Nov, 2022 | 11:41 AM
image

வட்ஸ்அப்-பில் மேலும் பல புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை மெட்டா நேற்று (03) வெளியிட்டுள்ளது. 

கலிபோர்னியா, மெட்டா நிறுவனத்தின் முக்கிய செயலியான வட்ஸ் அப், உலகெங்கும் பல பயனர்கள் உபயோகப்படுத்தும் ஒரு செயலியாக இருக்கிறது. 

தொடக்கத்தில் சாதாரணமாக குறுஞ்செய்தி, புகைப்படம் , வீடியோக்களை பகிர மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. அதே நேரத்தில் மெட்டா நிறுவனம் அவ்வப்போது பல அப்டேட்களை வெளியிட்டு பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில் வட்ஸ்அப்-பில் மேலும் பல புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை மெட்டா இன்று வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வட்ஸ் அப் வீடியோ காலில் 32 பேர் வரை இணையும் புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

மேலும் வட்ஸ்அப் குழுவில் 512 உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த புதிய அப்டேட்டில் 1024 உறுப்பினர்கள் வரை இணையலாம் என்று மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். 

இதை தவிர "கம்யூனிட்டிஸ்" என்ற புதிய வசதியையும் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வட்ஸ்அப்பில் குரூப் உரையாடல்களை ஒழுங்கமைக்க, பயனர்கள் பல குரூப்களை "கம்யூனிட்டிஸ்" கீழ் இணைக்க முடியும். இவை அனைத்தும் "என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன்" மூலம் பாதுகாக்கப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். இந்தப் புதிய அப்டேட் உலகளவில் விரைவில் வெளியிடப்பட்டு, அடுத்த சில மாதங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 20...

2025-03-15 19:00:33
news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23
news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46