மஹிந்த தலைமையில் பலமான அரசியல் கூட்டணி வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும் - பொதுஜன பெரமுன

Published By: Digital Desk 5

04 Nov, 2022 | 10:05 AM
image

(இராஜதுரை ஹஷான்)

2023 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மொட்டு சின்னத்தை முன்னிலைப்படுத்தி போட்டியிடுவோம்.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசியல் கூட்டணி வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பல சவால்களை கடந்துள்ளது.அரசியல் ரீதியில் எடுக்கப்பட்ட ஒருசில தீர்மானங்கள் நாட்டின் நலனை மையப்படுத்தியதாக காணப்பட்டாலும்,அது சூழ்நிலைக்கு பொருத்தமற்றதாக அமைந்ததால் பல நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிட்டது.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய பொதுஜன பெரமுன மறுசீரமைக்கப்படும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியுன் கூட்டணியமைத்து எதிர்வரும் காலங்களில் போட்டியிட உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்களாணை கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே ஆகவே மக்களாணை இல்லாத ஒரு கட்சியுடன் எவ்வாறு கூட்டணி அமைத்து போட்டியிடுவது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.

ஐக்கிய தேசிய கட்சி தமக்கான மக்கள் செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கும்,ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இன்றும் மக்கள் செல்வாக்கு உண்டு.

எதிர்வரும் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மொட்டு சின்னத்தை முன்னிலைப்படுத்த போட்டியிடுவோம்.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசியல் கூட்டணி வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38