(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டை மேலும் வீழ்ச்சியடைவதற்கு மக்கள் தயாரில்லை. அதனால்தான் அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இறுதியில் எதிர்க்கட்சிக்கு எதிராக மாறியது.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக கூச்சலிட்டமை தொடர்பில் கவலையடைகின்றேன் என ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி ஊடக பிரிவை அங்குரார்ப்பணம் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரிய சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றார். மக்கள் ஆரம்பத்தில் எதிர்கொண்டுவந்த பல பிரச்சினைகளுக்கு ஓரளவேனும் தீர்வு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. குறிப்பாக எரிபொருள், சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு நீண்ட நாட்கள் வரிசையில் இருந்துவந்த யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். இதனால் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது.
அதனால் மக்கள் தற்போது ஆர்ப்பாட்டம் போராட்டங்களை விரும்பவில்லை என்பது அரசாங்கத்துக்கு எதடிராக காெழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மூலம் விளங்கிக்கொள்ள முடியுமாகி இருக்கின்றது.
எதிர்க்கட்சிகளால் அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதும் இறுதியில் அது எதிர்க்கட்சிக்கு எதிராகவே மாறியது.
அத்துடன் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்க வந்த எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராகவும் கூச்சலிடப்பட்டது. இதுதொடர்பில் நாங்கள் கலவையடைகின்றோம். ஏனெனில் எதிர்க்கட்சித் தலைவர் என்பது நாட்டின் 4ஆவது பிரஜை.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்துவதே தற்போதுள்ள பொறுப்பாகும், மக்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர்.
அதற்காக கட்சி பேதங்களை மறந்து நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும். மாறாக நாட்டின் தற்போதைய நிலைமைய பயள்படுத்திக்கொண்டு யாரும் அரசியல் செய்ய முற்பட்டால் நாட்டை பாதுகாக்க முடியாமல் போகும்.
அதனால் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு யாரும் அரசியல் லாபம் தேடி முற்பட்டால் அவர்களை மக்கள் நிராகரிக்கும் நிலையே தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
அதனால் எமது அரசியல் நடவடிக்கைகளை தற்காலிகமாக விட்டு, விட்டு நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். நாடு ஸ்திரமானதொரு நிலைக்கு வந்த பின்னர் நாங்கள் எமது அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM