ஆஸி யுவதி கொலை : இந்திய நபரை கைது செய்ய உதவினால் 5 கோடி ரூபா  சன்மானம்

Published By: Sethu

03 Nov, 2022 | 04:28 PM
image

அவுஸ்திரேலியாவில் யுவதியொருருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்படும் இந்திய இளைஞர் ஒருவரை கைதுசெய்ய உதவுபவர்களுக்கு 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் (23.22 கோடி இலங்கை ரூபா / 5.21 கோடி இந்திய ரூபா) சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்விந்தர் சிங் எனும் 38 வயதான இளைஞரே இவ்வாறு தேடப்படுகிறார்.

அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாநிலத்திலலுள்ள கெய்ன்ஸ் நகரில் 2018 ஒக்டோபர் மாதம் டோயாஹ் கோர்டிங்லே எனும்இ 24 வயது யுவதி மர்மமாக கொல்லப்பட்டிருந்தார்.

இவர் தனது நாயை அழைத்துக்கொண்டு நடைபயிற்சிக்காக வீட்டிலிருந்து சென்றிருந்தார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

மறுநாள் வான்கெட்டி கடற்கரையில் அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கொலை தொடர்பில் ராஜ்விந்தர் சிங் பிரதான சந்தேக நபராக குயின்ஸ்லாந்து மாநில பொலிஸார் கருதுகின்றனர்

 அவர் இக்கொலை நடந்து 2 நாட்களின் பின் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளை விட்டுவிட்டுஇ சிட்னி வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என பொலிஸார் கருதுகின்றனர்.

அவரின் கைது தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு 3 பொலிஸ் அதிகாரிகள் இந்தியாவுக்கு சென்றிருந்தனர்.  எனினும் ராஜ்விந்தர் சிங் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், ராஜ்விந்தர் சிங்கை கைது செய்ய உதவுபவர்களுக்கு 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை சன்மானம் வழங்கப்படும் என குயின்ஸ்லாந்து பொலிஸார் அறிவித்துள்ளனர். 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பொலிஸாரால் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மிக அதிகமான சன்மானத் தொகை இதுவாகும்.

அவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலு;ளள தனது சொந்த ஊரான அமிர்சரஸ் நகருக்கு சென்றுவிட்டார் என குயின்ஸ்லாந்து பொலிஸார் நம்புகின்றனர்.

எனினும்இ அவர் இக்கொலையை செய்யவில்லை என ராஜ்விந்தர் சிங்கின் குடும்பத்தினர் கூறுகின்றனர். இக்கொலை நடந்து 2 நாட்களின் பின் அவர் இந்தியாவுக்கு திரும்பியமை தற்செயலான விடயம் என அவர்கள் கூறுகின்றனர்.

ராஜ்விந்தர் கண்டுபிடிக்கப்பட்டால் அவரை நாடு கடத்துமாறு அவுஸ்திரேலியா கடந்த வருடம் கோரிக்கை விடுத்திருந்தது. அக்கோரிக்கையை கடந்த மாதம் இந்திய அரசாங்கம் அங்கீகரித்திருந்தது.

10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் என்பது இந்தியாவில் பெரும் தொகை ஆகையால்இ இந்த சன்மான அறிவிப்பு பலன்கிடைக்கும் என நம்புவதாக டோயாவின் குடும்ப நண்பரான வெய்ன் ட்ரம்பிள் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52