logo

88 ஆவது முறையாக திருமணம் செய்த 61 வயது நபர் : மணப்பெண் முன்னாள் மனைவியாம்

Published By: Digital Desk 2

03 Nov, 2022 | 03:59 PM
image

இந்தோனேசியாவின் காதல் மன்னன் என்று அறியப்படும் 61 வயது நபர், 88ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள மஜலெங்காவைச் சேர்ந்த விவசாயி கான். 61 வயதான கான் இதுவரை 87 திருமணங்கள் செய்துள்ளார். 

கான் தனது 14 வயதில் முதல் முறையாக திருமணம் செய்து கொண்டார், அவருடைய மனைவி அவரை விட இரண்டு வயது மூத்தவர்.

பலமுறை திருமணம் செய்துகொண்ட கானுக்கு 'பிளேபாய் கிங்' என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது.

தற்போது கான் 88ஆவது முறையாக திருமணம் செய்துள்ளார். அதுவும் விவகாரத்து செய்த தனது முதல் மனைவியை.

இது குறித்து கான் கூறியதாவது:-

எங்களுக்கிடையிலான காதல் இன்னும் வலுவாக உள்ளது. எனது முன்னாள் மனைவி திருமண செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னை அணுகியபோது என்னால் மறுக்க முடியவில்லை.

பிளேபாய் கிங் 61 வயது 87 திருமணம் ...! 88வதாக முதல் மனைவியை மீண்டும்...!

நாங்கள் பிரிந்து நீண்ட நாட்களாகிவிட்டாலும், எங்களுக்கு இடையேயான காதல் இன்னும் வலுவாக உள்ளது. எங்களது திருமணம் ஒரு மாதமே நீடித்தது.

அப்போது எனது மோசமான அணுகுமுறை காரணமாக, திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என் மனைவி விவாகரத்து கேட்டார்.இந்த சம்பவம் என்னை கோபப்படுத்தியது, இதன் விளைவாக, பல பெண்களை திருமணம் செய்து கொண்டேன்.

ஆனால் பெண்களுக்கு நல்லதல்லாத விஷயங்களைச் செய்ய நான் விரும்பவில்லை. நான் அவர்களின் உணர்வுகளுடன் விளையாட விரும்பவில்லை

ஒழுக்கக்கேடு செய்வதை விட, நான் திருமணம் செய்துகொள்வதே சிறந்தது" என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், அவரது 87 திருமணங்களில் அவருக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த ஆண்டு இறந்த மிசோரமைச் சேர்ந்த 76 வயதான ஜியோனா சானா, 39 மனைவிகள் மற்றும் 94 குழந்தைகளைப் பெற்றுள்ளார் மற்றும் மிகப்பெரிய குடும்பத்திற்கு தலைமை தாங்கி உலக சாதனை படைத்துள்ளார்.

சானாவின் குடும்பத்தில் 33 பேரக்குழந்தைகள் உட்பட 167 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு பெரிய குடும்பம் இருந்தபோதிலும், அதை மேலும் வளர்க்க விரும்புவதாக 2011 இல் சனா கூறி இருந்தார்.

1997 இல், ஸ்காட்டிவுல்ப் என்ற பெண் திருமணம் செய்துகொள்வதில் கின்னஸ் சாதனை படைத்தார். அவர் அந்த நேரத்தில் 29 திருமணம் செய்து இருந்தார். மேலும் அவரது கடைசி மனைவி லிண்டா வுல்ப் 23 கணவர்களுடன் உலகில் அதிக திருமணம் செய்து கொண்ட பெண் என்ற சாதனையைப் படைத்தார்.

ஸ்காட்டி வுல்புக்கு 29 மனைவிகள், 19 குழந்தைகள், 40 பேரக்குழந்தைகள் மற்றும் 19 கொள்ளுப் பேரக்குழந்தைகள் இருந்தபோதிலும், அவர் இறக்கும் போது அவரது உடலைக் கோர யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியலை ஒரு விளையாட்டாக அங்கீகரித்தது சுவீடன்:...

2023-06-05 13:06:25
news-image

டிக்டொக் பார்த்து முட்டை சமையலுக்கு முயன்ற...

2023-06-02 17:07:02
news-image

மக்களை கட்டிப்போட்ட இயற்கையின் கண்கொள்ளாக் காட்சி...

2023-06-01 12:07:08
news-image

நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணி...

2023-05-29 10:23:44
news-image

மீன்பிடிப் போட்டியில் மீன்களின் உடலுக்குள் உலோகங்களை...

2023-05-26 16:43:05
news-image

களமிறங்கும் ’மோடி மாம்பழம்’ – ஏன்...

2023-05-25 16:38:24
news-image

வவுனியாவில் 8 கால்களுடன் பிறந்த அதிசய...

2023-05-24 14:28:12
news-image

காதலித்த கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்றது...

2023-05-20 12:54:29
news-image

காதல் திருமணம் செய்தவர்களே அதிகளவில்விவாகரத்து கேட்கின்றனர்......

2023-05-19 12:13:33
news-image

30,000 ரூபா சம்பளம் வாங்குபவரிடம் 7...

2023-05-12 18:04:43
news-image

திருடர்கள் பல விதம் ; பாதணிக்கடை...

2023-05-06 11:37:44
news-image

நான் என் வேலையைத்தான் செய்தேன் -...

2023-05-04 14:34:36